Categories: latest news

ஆரம்பமாகும் கமல்ஹாசனின் ஆட்டம்… அடுத்த படத்தின் ஷூட்டிங் எப்போ தெரியுமா?..

Kamalhassan 237: தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு வந்தார். மக்கள் நீதி மையம் என்கின்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இவர் சினிமாவை விட்டாலும் சினிமா இவரை விடாது என்பது போல மீண்டும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றி காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் நடிகர் கமல்ஹாசன்.

அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது என்று கூறப்படுகின்றது.

இப்படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடித்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்ததாக ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.

இதற்கிடையில் ஏஐ டெக்னாலஜியை கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் கமலஹாசன் தற்போது வரை அங்கு தான் இருந்து வருகின்றார். சமீபத்தில் அன்பறிவு அமெரிக்கா சென்று கமலஹாசனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்த பலரும் அமெரிக்காவிலேயே படத்தின் டிஸ்கஷன் நடைபெற்று வருவதாக கூறி வந்தார்கள்.

நடிகர் கமல்ஹாசன் இந்த மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை திரும்பிய உடனே இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு அன்பறிவு இயக்கத்தில் உருவாக இருக்கும் கமல்ஹாசன்237 திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திலேயே எடுத்து இருக்கின்றார்.

இந்நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதன்படி இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும், வருகிற மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் கமலஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடனே அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவையும் கொண்டாட இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

3 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago