‘ராயன்’ படத்துக்கு தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்த அஜித் பாடல்! கல்லா கட்டிய திரையரங்கம்.. ஒரே செலிபிரேஷன்தான்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 26ஆம் தேதி ரிலீஸான ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அவரே நடித்திருந்தார். படத்தில் தனுஷுடன் இணைந்து காளிதாஸ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.
படத்தில் கதையை விட ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்ததால் இளைஞர்களுக்கு இந்தப் படம் பெரிய ட்ரீட்டாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் தனுஷின் 50வது படமாக ராயன் அமைந்தது கூடுதல் சிறப்பு.ஒரு இயக்குனராகவும் தனுஷ் அவரது வேலையை சரியாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகியும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாகத்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ராயன் திரைப்படத்தை இன்று பார்க்க போனவர்களுக்கு திரையரங்கில் பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.
கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான திரையரங்கான வாசு சினிமாஸ் என்ற தியேட்டரில் ராயன் திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பிப்பதற்கு முன் அஜித்தின் 32வது ஆண்டு விழாவை ஒட்டி விடாமுயற்சி படத்தின் போஸ்டரையும் கூடவே வேதாளம் படத்தில் அமைந்த ஆலுமா டோலுமா பாடலை முழுவதுமாக ஒளிபரப்பியிருக்கிறார்கள்.
இதை பார்த்ததும் ரசிகர்கள் ஒரே ஆரவாரத்தில் கத்த தியேட்டரே ஒரே களேபரமாகியிருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது, இந்த வீடியோவை பார்த்த ஒரு சிலர் ‘இதை நேத்தே அறிவித்து இருந்தால் பசங்க பட்டைய கிளப்பி இருப்பானுங்க. ஐடியா இல்லாத பயலுக’ என திரையரங்கு உரிமையாளர்களை திட்டி வருகிறார்கள்.
இவர்கள் கூறுவதை போல் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை இன்னும் பெரிய திரையில் பார்க்காத ரசிகர்களுக்கு திடீரென அஜித்தின் போஸ்டர் மற்றும் பாடலை போட்டதும் அந்தளவுக்கு மகிழ்ச்சியில் திகைத்துப் போனார்கள்.