எம்ஜிஆர் இருக்கும் போதே கோலிவுட்டை அலற விட்ட வாட்டால் நாகராஜ்.. புரட்சித்தலைவரிடம் முடியுமா?
யார் அந்த வாட்டால் நாகராஜ்? கர்நாடகாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் புள்ளி. இவர் சமீப காலமாக தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் வகையில் பேசிக்கொண்டு வருகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒவ்வொரு மாநிலங்களில் அதனுடைய வெளியீட்டு நேரம் மாறுபடுகிறது .தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதியில்லை .ஆனால் ஆந்திரா ,கர்நாடகா என மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சிக்கு அனுமதி இருக்கின்றது. அதனால் நம்மூர் மக்கள் முன்னதாகவே பார்த்து விட வேண்டும் என்று இங்கிருந்து பெங்களூரு கிளம்பி முதல் காட்சியை பார்த்துவிட்டு 7 மணிக்கு உள்ளாகவே படத்தைப் பற்றிய ரிசல்ட்டை சமூக வலைதளங்களில் பரப்பி விடுகின்றனர்.
அதை பார்த்து நம்மூர் வாசிகள் படத்துக்கு போகவா வேண்டாமா என்பதை முடிவெடுக்கின்றனர். இது ஒரு வகையில் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஆபத்து தான் .அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படங்களை வெளியிட வேண்டும் என ஒரு கோரிக்கை எழுந்து வருகின்றது. வெளிநாட்டில் ரிலீஸ் ஆனாலும் இந்திய நேரப்படி தான் அங்கும் ரிலீஸ் ஆகவேண்டும் என கூறி வருகிறார்கள். இது எல்லாம் தமிழ் திரையுலகத்தை பிழைக்க வைக்கும் ஒரு காட்சி. இப்போது வாட்டால் நாகராஜ் கூறுவது என்னவெனில் பெங்களூரில் 4 மணி காட்சி போட்டால் தானே அங்கிருந்து வந்து படத்தை பார்த்து கருத்தை சொல்வீர்கள்.
அந்த அதிகாலை காட்சியே கிடையாது என கூறுகிறார் வாட்டால் நாகராஜ் . கர்நாடகாவில் இருக்கும் ஒரு எழுச்சிமிக்க அரசியல் பிரமுகர். குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக குரலை அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதனால் இங்கு இருக்கும் பல பேருக்கு அவரை பிடிக்காது. ஆனால் அங்கு உள்ள மக்களுக்கு அவர் ஒரு ஹீரோவாக தெரிகிறார். அவர் முன் நின்று ஒரு செயலை எடுத்தார் என்றால் அது நல்ல வகையில் முடிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பலமும் மிகுந்த ஒரு அரசியல் பிரமுகராகவும் அங்கு இருக்கிறார். சமீபத்தில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஒரு வெடிகுண்டை தூக்கி போட்டார்.
அது என்னவெனில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு காண்பித்து வருகிறது. அந்த அணையை கட்ட விடவில்லை என்றால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு படத்தை க் கூட நாங்கள் ஓட விட மாட்டோம். எந்த தமிழ் படமும் இங்கு ரிலீஸ் ஆகாது என அவர் கூறியிருக்கிறார் .இதை நாமும் ஒரு மேலோட்டமாக கடந்து போய்விட முடியாது .ஏனெனில் அங்கு ஒரு வலிமை மிகுந்த கட்சியாக அவர் இருக்கிறார். இன்னொரு பக்கம் அரசியல் விவகாரத்திற்கும் திரை பிரபலங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற அடிப்படையிலும் நாம் பார்க்க வேண்டும்.
அரசியல் விவகாரத்தில் ஏன் பிரபலங்களை இழுக்கிறார் என்றும் யோசிக்க வேண்டும் .இதே வாட்டால் நாகராஜ் எம்ஜிஆர் காலத்திலேயே தமிழ் சினிமாவை இங்கு ஓட விடமாட்டோம் என கூறினாராம். உடனே கோட்டைக்கு புறப்படுவதாக இருந்த எம்ஜிஆர் நேராக அதிகாலை 7 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து பெங்களூர் கெஸ்ட் ஹவுஸிற்கு போய்விட்டாராம். அங்கு அதிகாரிகளை அழைத்து வாட்டால் நாகராஜனை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என அதிகாரிகளும் தடபுடலாக செயல்பட்டு வாட்டால் நாகராஜனை அழைத்து வந்திருக்கின்றனர்.
நான் இவரிடம் தனியாக பேச வேண்டும் என எம்ஜிஆர் கூற அவரும் வாட்டால் நாகராஜனும் ஒரு அறையில் கதவை பூட்டிக்கொண்டு சில மணி துளிகள் தனியாக பேசி இருக்கின்றனர். வெளியே வந்ததும் வாட்டால் நாகராஜன் இனிமேல் தமிழ் படங்களுக்கு நான் எந்தவித இடையூறும் வைக்க மாட்டேன். தமிழ் படங்கள் இங்கு ரிலீஸ் ஆகலாம் என்ற ஒரு அறிக்கையை விடுத்தாராம்.
ஆனால் அந்த அறைக்குள் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என இதுவரைக்கும் தெரியாது. தமிழ் சினிமாவிற்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே எம்ஜிஆர் எடுத்த அந்த முடிவு இன்று வரை பாராட்டப்படுகிறது. அப்படி இந்த விவகாரத்தை நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் முன் நின்று வந்து இதற்கான ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என வலை பேச்சு அந்தணன் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.