Vetrimaran simbu: தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இதில், ஆடுகளம், அசுரன் ஆகிய 2 படங்களுக்காகவும் தனுஷ் தேசிய விருது வாங்கினார். எனவே, வெற்றிமாறனும் ஒரு சிறந்த இயக்குனராக பார்க்கப்படுகிறார். வட சென்னை படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
2018ம் வருடம் வெளிவந்த இந்த படம் வட சென்னை பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. பக்கா கேங்ஸ்டர் படமாக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆண்ட்ரியாவை அமீர் காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஆனால், அவருடன் இருக்கும் கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி போன்றவர்களே அவரை கொலை செய்துவிடுவார்கள்.
அதன்பின் ஆண்ட்ரியா சமுத்திரக்கனியை திருமணம் செய்து கொள்வார். தனுஷ் பொங்கியெழுந்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது. இந்த படத்தில் முதலில் சிம்பு நடிக்கவிருந்தார். ஆனால், அவர் விலகவே தனுஷ் நடித்தார். படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ‘வட சென்னை 2-வை எப்போது எடுப்பீர்கள்?’ என்கிற கேள்வியை வெற்றிமாறன், தனுஷ் இருவரிடமும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், வட சென்னை 2 அடுத்த வருடம் துவங்கும் என தனுஷ் சொல்லிவிட்டார். இதற்கிடையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு புதிய படம் துவங்கியிருக்கிறது. இதுவும் வட சென்னை தொடர்பான கதைதான். வட சென்னை படத்தில் வரும் அமீர் வேடத்தில் நீட்சியாக சிம்புவின் கதாபாத்திரம் இருக்கும் என சிலர் சொல்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் புரமோ காட்சிகளையும் வெற்றிமாறன் எடுத்தார்.
இந்நிலையில், சிம்பு நடிக்கும் படத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா என எல்லோருமே நடிக்கவிருக்கிறார்கள் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் எல்லோருமே வட சென்னை படத்தில் நடித்தவர்கள். எனவே, வெற்றிமாறன் எதை படமாக எடுக்கிறார் என தெரியவில்லை. இவர்கள் எல்லாம் இதில் இருந்தால் தனுஷ் நடிக்கும் வட சென்னை 2 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…