யாரையும் நம்ப முடியாது.. டாப் நடிகருடன் கூட்டணி போடும் கார்த்தி.. இந்த காம்போ நல்லாருக்குமே!..

Actor Karthi: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி என்கின்ற அடையாளத்துடன் பருத்திவீரன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான ஜப்பான் மற்றும் மெய்யழகன் போன்ற திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. அது மட்டுமில்லாமல் அண்ணன் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.
சர்தார் 2 திரைப்படம் : மெய்யழகன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் 2 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் சர்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, ராசி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் நடிகர் கார்த்தி வா வாத்தியாரே என்கின்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
கார்த்தி 29: தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றார். சர்தார் 2, வா வாத்தியாரே, கைதி 2 என அடுத்தடுத்து ஏகப்பட்ட திரைப்படங்களை கமிட் செய்திருக்கும் நடிகர் கார்த்தி டாணாக்காரன் திரைப்படத்தில் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார்.
இப்படத்திற்கு கார்த்தி 29 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி வெளியானதிலிருந்து நடிகர் கார்த்தி மற்றும் வடிவேலு காம்போவில் நிச்சயம் இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மீண்டும் பிஸியாகும் வடிவேலு: தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என அழைக்கப்பட்டவர் வடிவேலு. தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சூர்யா, அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசதி வந்த வடிவேலு பின்னர் 23ஆம் புலிகேசி பார்ட் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வடிவேலுக்கு ரெட் கார்டு ஒதுக்கப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் நடிகர் வடிவேலு தவித்து வந்தார்.
இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க தொடங்கிய வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கின்ற திரைப்படத்தின் நடித்திருந்தார். அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது மாரீசன் மற்றும் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து கார்த்தி 29 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் மீண்டும் பழைய வடிவேலுவை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்.