வடிவேலுகிட்ட பிடிச்ச விஷயமே அதுதானாம்... அட அவரது மகன் சிம்பிளா சொல்லிட்டாரே!

by sankaran v |
வடிவேலுகிட்ட பிடிச்ச விஷயமே அதுதானாம்... அட அவரது மகன் சிம்பிளா சொல்லிட்டாரே!
X

தமிழ்சினிமா உலகில் வைகைப்புயல் வடிவேலு தவிர்க்க முடியாத காமெடி நடிகர். வடிவேலுவின் மூத்த மகன் சுப்பிரமணி தனது தந்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்பாகிட்டயான்னு கேட்ட அவரது மகன் அவரு வந்து உலகளாவிய ஒரு மிகப்பெரிய நடிகன். மாமேதைன்னு தான் சொல்லணும்னு சிம்பிளா சொல்லிட்டாரு. அதே மாதிரி அவரு நடிச்ச படங்கள்லயே எது பிடிக்கும்னு கேட்குறாங்க.

என் புருஷன் குழந்தை மாதிரி: அவரு நடிச்ச படங்கள்ல அவரு பண்ற எல்லா காமெடியும் பிடிக்கும். எல்லாரையும் சிரிக்க வைக்கிற மாதிரி தான் பண்ணுவாரு. என் புருஷன் குழந்தை மாதிரிதான்னு நினைக்கிறேன் அந்தப் படம். அதுல நீங்க உட்காருங்க. நீங்க உட்காருங்கன்னு சொல்லி அந்தக் கடையைவே அடிச்சி நொறுக்கிடுவாங்க. அது நல்லாருக்கும். நேச்சுரலா இருக்கும்.

வின்னர்: இரண்டு பேரு டீக்கடைக்குப் போனா என்ன நடக்கும்கறதை நல்லா எடுத்துருப்பாங்க. எங்க அப்பா கூட நடிச்சவரு டைரக்டர் மனோசார். அவரை ரொம்ப பிடிக்கும். அப்பா நடிச்சதுல மெர்சல், பகவதி ரொம்ப பிடிக்கும். விஜய் அண்ணா கூட போட்டோ எல்லாம் எடுத்துருக்கேன். வின்னர் படத்துக்கு அப்பா உண்மையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டாருன்னுதான் சொல்லணும்.

கால்ல காயம்: அந்தப் படத்துல காமெடி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அந்தப் படத்துல நடிக்கும்போது அப்பாவுக்குக் கால்ல காயம் பட்டுடுச்சி. மலை பாகங்கள்ல ஓடுற மாதிரி சீன். ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி நடிச்சாரு. எங்ககிட்ட வந்து கால் வலிக்குதுன்னு அழுதுருக்காரு. அதே மாதிரி மானஸ்தன் படத்துல ஒரு குழிக்குள்ள குதிச்சிருக்காரு.

விவேக், கவுண்டமணி: டைரக்டரே வேணான்னு சொல்லியும் நானே குதிப்பேன்னு குதிச்சாரு. அடிபட்டுடுச்சு. வலி, வேதனையோட நடிச்சாரு. அதே மாதிரி எனக்கு விவேக் சாரும் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி கவுண்டமணி சாரும் ரொம்ப பிடிக்கும். அதட்டி அதட்டிப் பேசினாலும் அதிருத மாதிரி சிரிப்பு வந்துடும். அதே போல நடிக்க ஆசை இருக்கான்னு கேட்டா இருக்கு. அதுக்குக் கொஞ்சம் காலம் ஆகும். எனக்கு ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரியே மாதிரி சில மேனரிசங்கள் வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story