வடிவேலு காமெடிக்கு இப்போ பெரிய ரெஸ்பான்ஸ் இல்ல... அடடே அதுதான் காரணமா?

by sankaran v |
வடிவேலு காமெடிக்கு இப்போ பெரிய ரெஸ்பான்ஸ் இல்ல... அடடே அதுதான் காரணமா?
X

வடிவேலுவின் ஆரம்ப காலப் படங்களில் அவரது காமெடிக்கு இருந்த வரவேற்பு அவருக்கு பெரிய கேப் விழுந்த பிறகு கிடைக்கவில்லை. அதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்ல. குறிப்பாக எலி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் ரசிக்கவில்லை. காரணம் என்னன்னு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

ஒர்க் அவுட்: இன்றைக்கு வடிவேலுவுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல. இன்னும் சொல்லப்போனா அவர் ஒரு கேப்புக்குப் பிறகு நடித்த எந்தப் படமும் ஒர்க் ஆகல. இன்னும் பார்த்தீங்கன்னா ஆரம்பகாலத்துல வடிவேலுவோட காமெடி ஒர்க் அவுட் ஆனது. அப்போ அவர் மண்டையில எதுவும் ஏத்திக்காம நடிகனா இருந்தாரு.

தலைக்கனம்: என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பாரு. அது ஒர்க் அவுட் ஆச்சு. அதுக்கு அப்புறம் என்னாச்சுன்னா வடிவேலுவுக்கு வந்து தலைக்கனம் உச்சத்துக்குப் போச்சுன்னு சொல்வாங்க இல்லையா... அந்த மாதிரியான ஒரு கேரக்டரா அவர் மாறிட்டாரு.

குஷ்பூ கெஞ்சுறாங்க: காமெடின்னா நாம தான். நம்மள விட்டா வேற ஆளு இல்ல. இன்னும் சொல்லப்போனா குஷ்பூ வந்து இவருக்கிட்ட கெஞ்சுறாங்க. 'கெட் அவுட்'னு சொன்னாரு வடிவேலு. அதுக்கு என்ன காரணம்னா உங்களை எல்லாம்விட நான் பெரிய ஆளு. அப்படிங்கற எண்ணம் அவர் மைன்ட்ல இருந்ததுதான்.

வீழ்ச்சி ஸ்டார்ட்: அப்படி ஒரு எண்ணம் எப்போ இருந்ததோ அன்னைக்கே அவரோட வீழ்ச்சி ஸ்டார்ட் ஆகிடுச்சு. அதுவும் இல்லாம பொதுவெளியில் அவர் பேசுகிற பேச்சு, திரைக்குப் பின்னால் இருக்கக்கூடிய அவரது சுயமுகம். அதுதான் அவரது நிஜமுகம்.

அதுகுறித்து நம்மைப் போன்றவர்கள் யூடியூப்ல பேசறது எல்லாம் கேட்ட மக்களுக்கு அடடா, வடிவேலு திரையில் தான் காமெடியன். நிஜத்தில் பெரிய வில்லன் போல இருக்கே. அப்படிங்கற உண்மை மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்துருச்சு.

நோ ரெஸ்பான்ஸ்: மக்களுக்கு எல்லாம் இந்த உண்மை தெரிந்தபிறகு வடிவேலுவை நீங்க வந்து ஒரு அப்பாவியா, காமெடியனா, சிரிக்க வைக்கிறவனா திரையில பார்க்கும்போது இவங்க வந்து 'கம்'முன்னு பார்க்குறாங்க. 'யப்பா நீதானே அவரைக் காலி பண்ணின ஆளு...' அப்படிங்கற மைன்ட் செட்டோடு பார்க்கும்போது வடிவேலுவோட காமெடிக்கு ஒரு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்காமலே போயிடுச்சு.

சுந்தர்.சி படம்: இந்த சூழ்நிலையில அவர் மீண்டும் சுந்தர்.சி.யோடு ஒரு படம் பண்றாரு. இந்தப் படத்துக்கு எந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்னு தெரியல. எனக்குத் தெரிஞ்சி வடிவேலுவோட அடுத்த இன்னிங்ஸ்ல மற்ற படங்களுக்குக் கிடைச்ச ரிசல்ட்தான் இதுக்கும் கிடைக்கும்னு நினைக்கிறேன். அதைத் தாண்டி மக்கள் என்ன முடிவைக் கொடுக்கப் போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வடிவேலு கேப்டன் விஜயகாந்திடமே ஒரு கட்டத்தில் மல்லுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தான் அவருக்கு திரையுலகில் நீண்ட இடைவெளி விழுந்தது.

Next Story