அடக்கி வாசிச்சாலும் அலற விடுவோம்.. கேங்கர்ஸ் படத்துக்கு இவ்ளோ மவுசா? வடிவேலுவா கொக்கா?
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு நகைச்சுவை நடிகராக உயர்ந்து இன்று ஹீரோவாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் காலத்தில் அவர்களுடன் ஒரு துணை நடிகராக தன்னுடைய கெரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிற்காலத்தில் நகைச்சுவையில் ஒரு முன்னணி நடிகராக மாறினார். கவுண்டமணி செந்தில் எப்படி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்களோ அதைப்போல வடிவேலுவும் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொண்டார்.
வைகைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படும் வடிவேலு அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்த நடிகராக மாறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு. குறிப்பாக மாமன்னன் திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது. ஆனாலும் மக்கள் அவருடைய நகைச்சுவையை மிஸ் செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .தன்னுடைய முகபாவனையாலும் உடல் மொழியாலும் அனைவரையும் சிரிக்க வைப்பவர் வடிவேலு.
அந்த ஒரு நகைச்சுவை இப்போது தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர் .இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதைப்பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார், சமீபத்தில் தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் திரையுலகை சார்ந்த எக்கச்சக்கமான பேர் கலந்து கொண்டனர்.
விழாவே மிக கோலாகலமாக மாறியது. அதில் பெரும்பாலும் வந்தவர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். அவர்கள் வந்ததற்கு காரணமே வடிவேலு நடித்த கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு தான் என தனஞ்செயன் கூறினார். அதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பதை பற்றியும் அவர் விளக்கமாக கூறியிருக்கிறார். கேங்கர்ஸ் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை வாங்குவதற்காக தான் அத்தனை விநியோகஸ்தர்களும் அந்த பூஜையில் கலந்து கொண்டார்களாம். அதில் ஒரு விநியோகஸ்தர் சேலத்திற்கான உரிமையை வாங்க வேண்டும் என வந்தாராம்.
அவர் கேங்கர்ஸ் திரைப்படத்தை சேலத்துக்கு மட்டும் இரண்டரை கோடி அளவில் கேட்கிறாராம். சேலத்திற்கு மட்டுமே இத்தனை கோடி என்றால் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை மொத்தமாக 25 கோடி எனும் அளவில் வந்துவிடும் .அந்த அளவு பட்ஜெட் வைத்திருக்கிறார் சுந்தர் சி. சுந்தர் சி யின் எதிர்பார்ப்பு என்னவெனில் நானும் வடிவேலுவும் வரும்பொழுது மிகப்பெரிய படமாக அது வரும். மிகப்பெரிய வெற்றியாக மாறும் என்பதுதான். ஆனால் இந்த படத்தில் வடிவேலு கொளுத்தி தள்ளி இருக்கிறார் என சுந்தர் சி ஏ அவ்வப்போது கூறி வருகிறாராம்.
அந்த அளவுக்கு காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதாம். அதனால் தான் தமிழ்நாடு தியேட்டரரிக்கல் உரிமையை 25 கோடி கேட்கிறார்களாம். இதிலிருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் இருபதாம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பிரமோஷனும் இல்லை. படத்தின் போஸ்டர், தலைப்பு இது மட்டும்தான் அந்த படத்தின் அப்டேட். ஆனால் இந்த படத்திற்காக எந்த அளவு வரிசையில் நிற்கிறார்கள் என்பதை இதிலிருந்து நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுக்கெல்லாம் ஒரே காரணம் சுந்தர் சி மட்டும்தான் என தனஞ்செயன் கூறினார்.