எல்லாம் பொய்!. மகிழ் திருமேனி செய்த அலப்பறைக்கு ஆதாரம் காட்டவா?!.. பொங்கும் பிரபலம்!..

Vidaamuyarchi: தடையற தாக்க, மிகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. அஜித்தின் விடாமுயற்சி படத்தை இவர்தான் இயக்கியுள்ளார். அஜித் படத்தை இயக்குகிறார் என்பதால் மீடியாவின் வெளிச்சம் இவர் மீதும் படிந்திருக்கிறது. இவரை வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகிறார்கள்.
மகிழ் திருமேனி: விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என்பதால் அதற்கு புரமோஷனாக இருக்கட்டும் என்பதற்காக மகிழ் திருமேனியும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். இதில், அவர் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அஜித் எப்படிப்பட்டவர், அவர் எப்படி நடந்து கொள்வார், படத்தை பற்றி அவர் என்ன சொன்னார் என பல தகவல்களையும் நெகிழ்ந்து பேசி வருகிறார்.
லைக்கா தயாரிப்பில் உருவான விடாமுயற்சி படம் கடந்த வருடம் ஜனவரியில் துவங்கப்பட்டு போன வருடம் இறுதியில் முடிவடைந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பல மாதங்கள் நடந்தது. இதற்கு லைக்கா ஒரு காரணம் என்றாலும் மகிழ் திருமேனி மிகவும் மெதுவாக படமெடுப்பார், எடுத்த காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுப்பார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.
வலைப்பேச்சு அந்தணன்: சினிமா தொடர்பான முக்கிய செய்திகளை தொடர்ந்து சொல்லி வரும் வலைபேச்சு யுடியூப் சேனலிலும் மகிழ் திருமேனி பற்றி இப்படி சொல்லப்பட்டது. ஆனால், இதை மகிழ் திருமேனி மறுத்தார். நான் திட்டமிட்டே காட்சிகளை எடுக்கிறேன். எடுத்த காட்சிகளை எடிட்டிங் செய்து பார்த்துவிட்டு மறுபடி அந்த காட்சிகளை நான் எடுப்பதாக என்னை சொல்லுகிறார்கள். அப்படி நான் ஒரு நாளும் செய்தது இல்லை. என்னை பற்றி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர்கள் சொன்னது உண்மை என நிரூபித்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன்’ என கோபத்துடன் சொல்லியிருந்தார்.
இதையடுத்து கலகத் தலைவன் பட விழாவில் ‘மகிழ் திருமேனி மெதுவாகத்தான் படம் எடுப்பார். ஒருநாள் எடுத்த காட்சியையே அடுத்தநாள் மீண்டும் எடுப்பார்’ என உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்து ‘எங்களை மகிழ் திருமேனி திட்டியதற்கு இதுதான் பதில்’ என சொல்லியிருந்தார்.
இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ’ மகிழ் திருமேனி விடாமுயற்சி ஷுட்டிங்கில் செய்த அட்டகாசங்கள் பற்றி லைக்கா நிறுவனத்தில் இருப்பவர்கள் என்னிடம் பேசிய வாட்ஸ் அப் உரையாடலை நான் காட்டவா?.. அஜித் அவரின் எல்லா படங்களிலும் நிரவ்ஷா (ஒளிப்பதிவாளர்) இருக்க வேண்டும் என ஆசைப்படுவார். ஆனால், மகிழ் திருமேனி அவரிடமே பிரச்சனை செய்து அவரை மாற்றிவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.