Categories: Cinema News latest news

கங்கை அமரன் என்ன யோக்கியமா?!.. சின்மயி விவகாரம் பற்றி பொங்கும் பிரபலம்!..

Vairamuthu: இளையராஜா, கங்கை அமரன், வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்கள் சினிமாவில் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் உருவான நிழல்கள், காதல் ஓவியம், கடலோரக் கவிதைகள், மண் வாசனை, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் சிறப்பான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

ஆனால், இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே ஏதோ ஒரு சம்பவத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிட்டது. எனவே, கடந்த 30 வருடங்களுக்கும் மேல் இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை. இருவரும் இணைந்து பணிபுரியவும் இல்லை. ரோஜா படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதினார். கடந்த சில வருடங்களாக ரஹ்மானின் இசையிலும் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இல்லை.

ஒருபுறம் சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார் என சொல்லி அதிர வைத்தார். அவரைத் தொடர்ந்து பல பெண்களும் வைரமுத்து பற்றி சமூகவலைத்தளங்களில் பேசினார்கள். ஆனால், தன்னைப்பற்றி பொய்யான தகவல்களை சொல்கிறார்கள் என வைரமுத்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், சின்மயி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்த கங்கை அமரன் வைரமுத்து மிகவும் அவதூறாக பேசினார். வைரமுத்து நல்ல கவிஞர். ஆனால், நல்ல மனிதர் இல்லை என புகார் சொன்னார். இந்நிலையில், பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு சின்மயிக்கு உரிமை உண்டு. ஆனால், கங்கை அமரன் வைரமுத்து பற்றி மிகவும் அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது. அவர் என்ன யோக்கியமா?.. அந்த நிகழ்ச்சியில் சம்பந்தமே இல்லாமல் வந்து வைரமுத்துவை திட்டிகொண்டிருக்கிறார். வைரமுத்துவை திட்டுவதற்கு முன் ‘நாம் என்ன யோக்கியமா?’ யோசிக்க வேண்டும்.

பிரபல கவிஞரின் மகள் வாழ்க்கை சின்னபின்னமானதற்கு யார் காரணம் என கங்கை அமரனுக்கு தெரியும். கங்கை அமரன் என்னென்ன வேலைகளை செய்தார் என்பது சினிமாத்துறையை சேர்ந்த பலருக்கும் தெரியும். இப்படி சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து வந்து வைரமுத்துவை திட்டுவதற்கு பதில் சின்மயி நீதிமன்றத்தை நாடுவது நல்லது’ எனப்பேசியிருக்கிறார்.

Published by
சிவா