கமலுக்கு இருக்கிற பெருந்தன்மை ரஜினிக்கு இல்ல! இல்லைனா அது நடந்திருக்குமே.. பிரபலம் சொன்ன தகவல்
கோலிவுட்டிற்கு இரு பெரும் பில்லர்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினியும் கமலும்தான். இன்றும் பாக்ஸ் ஆஃபிஸில் இவர்கள்தான் வசூல் மன்னர்கள். 80களிலும் சரி, 2000களிலும் சரி. இன்று வரை அடுத்த தலைமுறை நடிகர்கள் என சொல்லப்படும் எவராலும் இவர்கள் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. ரஜினி , கமல் இவர்களுக்கு இணையான புகழைப் பெற்ற நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.
ஆனால் அஜித் விஜயாலுமே இவர்களுடன் போட்டி போட முடியவில்லை. இவர்கள் கட்டி எழுப்பிய கோட்டைக்குள் இன்று வரை இவர்கள்தான் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப இவர்களும் மாறிக் கொண்டுதான் வருகின்றனர்.
பேன் இந்தியா நடிகர்களாகவும் மாறிவிட்டனர். ரஜினி, கமலின் எந்தப் படங்கள் ரிலீஸானாலும் பேன் இந்தியா படமாகத்தான் வெளியாகின்றன. ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.
அதே போல் கமலின் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பாராத தோல்வியை தழுவினாலும் அவர் கேமியோ ரோலில் நடித்த கல்கி திரைப்படத்தில் கமலின் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கமல் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதில் சிம்புவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதை பற்றி தொகுப்பாளர் ஒருவர் வலைபேச்சு அந்தணனிடம் ‘இப்போது கமல் தனித்து எந்த படத்திலும் நடிக்க முடியாதா? விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி, பகத் என முன்னணி நடிகர்களுடன் கூட்டணி வைத்திருந்தார். இப்போது சிம்புவுடன் கூட்டணி வைத்திருக்கிறாரே? ’ என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அந்தணன் ‘அப்படியெல்லாம் இல்லை. இதை அப்போதிலிருந்தே கமல் செய்து கொண்டுதான் வருகிறார். காதலா காதலா படத்தில் பிரபுதேவாவுடன் நடித்தார். அன்பே சிவம் படத்தில் மாதவனுடன் நடித்தார். இது கமலுக்கே உண்டான பெருந்தன்மை. ஏனெனில் அவருடன் நடிக்கிறவர்கள் எல்லாருமே கமலை ஒரு முக்கிய அந்தஸ்தில் வைத்து பார்க்கக் கூடிய நடிகர்கள்.’
‘அவர்கள் கமலுடன் நடிப்பதை பெருமையாக கொள்வர். ஆனால் ரஜினி அப்படி இல்லை. தன் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கவே விரும்பவில்லை. அந்த பெருந்தன்மை ரஜினிக்கு இல்லை’என அந்தணன் கூறினார்.