Categories: latest news

யாரு யாருக்கு ஜோடி? கலாச்சார புரட்சியால இருக்கு.. தக் லைஃபில் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சி

Thuglife Review: தக் லைஃப் மணிரத்னம் படம் என்பதால் ரத்தக்களரி அதிகமாக இல்லை என கூறும் பட்சத்தில் இருந்தாலும் மணிரத்தினம் படத்தில் இப்படி ஒரு வன்முறையா என்ற சொல்லும் அளவிற்கு படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது .கதையை நம்பி படம் எடுக்கலாம் என்பது மணிரத்தினத்தை பொறுத்த வரைக்கும் சரியாக இருக்கும் .ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு கமலை நம்பி படம் எடுக்கலாம் என்ற அளவுக்கு இருக்கிறது .

அதனால் தான் ஓப்பனிங்கில் கமலின் இள வயது கமலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள் .அவ்வளவு அற்புதமாக இருக்கிறது விஎஃப்எக்ஸ். ஒரு காட்சியில் திடீரென குருதிப்புனல் கமல் மாதிரியே இருக்கிறது. அதேபோல் நாயகன் படத்தில் இள வயது தோற்றத்தில் இருக்கும் கமலையும் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. பல எமோஷனல் காட்சிகள் இந்த படத்தில் இருக்கிறது.

குளோஸப்பில் அதை காட்டும் பொழுது நம்மை அறியாமலேயே அழுகை வந்து விடுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கமலின் கழுத்தை நெரிக்கும் காட்சி வரும் .அதைப் பற்றி மேடையில் பேசும்போது உண்மையாகவே கழுத்தை நெறுத்து விட்டோமோ என்ற பயம் வந்துவிட்டது என சிம்பு கூறினார். அது கேட்பதற்கு மேடைப்பேச்சுக்காக சொல்கிறார் என தோன்றியது.

ஆனால் படத்தை பார்க்கும் பொழுது அவர் சொன்னது உண்மைதான். அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. அதனால் கமலை வியந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்து பல கேரக்டர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். இந்த படத்தில் இருக்கும் பெரிய சவால் என்னவெனில் இவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்டை சரியாக பயன்படுத்துவது தான். படத்தின் கிளைமாக்ஸில் கூட கமலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவத்தை தான் சிம்புவுக்கு கொடுத்திருக்கிறார்கள் .

படத்தில் முகம் தெரிகிற காட்சியில் சிம்பு குறைவாக இருந்தாலும் அவருடைய கேரக்டர் பெயரை ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படம் முழுக்க டிராவல் செய்கிறார் சிம்பு. இதில் பெரிய அதிர்ச்சி என்னவெனில் மேடம் ஐ அம் ஒன்லி யுவர் ஆடம் என சிம்பு போய் அந்த இடத்தில் உட்கார்ந்து விடுகிறார். இந்த கலாச்சார அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லை.

thuglife

ஏனெனில் கமலின் ஜோடி என த்ரிஷா வருகிறார். கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு வருகிறார் .ஒரு கட்டத்தில் கதையில் கமல் இல்லை. அடுத்து நான் தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு வந்துவிட்டார். வந்ததும் திரிஷாவை தேடியா போவார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அதன் பிறகு எப்படி போகுது என்பதுதான் படம் .கலாச்சார அதிர்ச்சியாக இது இருந்தாலும் மணிரத்தினத்தை பொறுத்தவரைக்கும் இது கலாச்சார புரட்சி என வலைப்பேச்சில் படத்தைப் பற்றி விமர்சித்திருந்தனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

16 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

18 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago