வனிதா சொன்ன அக்டோபர் 5 இன்னைக்குதானே... என்ன விஷயம் தெரியுமா..? அவரே வெளியிட்ட வீடியோ..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 10:59:03  )
வனிதா சொன்ன அக்டோபர் 5 இன்னைக்குதானே... என்ன விஷயம் தெரியுமா..? அவரே வெளியிட்ட வீடியோ..!
X

vanitha vijayakumar

தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர்களின் மகள் என்ற அறிமுகத்துடன் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

அதைத்தொடர்ந்து அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். மகன் ஸ்ரீஹரியை ஆகாஷ் அவர்களே வளர்த்து வருகிறார். ஸ்ரீ ஹரி இப்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார். மேலும் மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விவாகரத்துக்கு பிறகு வனிதா மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமண உறவும் விவாகரத்தில் முடிந்தது. இந்த தம்பதிகளுக்கும் ஒரு மகள் இருக்கிறார்கள். முதல் கணவருக்கு பிறந்த மகளுடனும், இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளுடன் தான் வனிதா தற்போது வசித்து வருகின்றார். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப் பிரபலமான வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சின்னத்திரை, சீரியல்கள் என்று மிக பிஸியாக இருந்த இவர் தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.

இதற்கிடையில் பீட்டர் பால் என்ற நபரையும் அவர் திருமணம் செய்து கொண்டார். அந்த நபருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார். சமீபத்தில் தான் பீட்டர் பால் உயிரிழந்தார். இது அவரின் மூன்றாவது திருமணமாகும். இதைத்தொடர்ந்து தற்போது ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவுக்கும் திருமணம் என்கின்ற பெயரில் போஸ்டர் ஒன்று வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்ன வனிதா அக்கா நான்காவது திருமணமா? என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். வனிதா விஜயகுமாரே இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சேவ் த டேட் என்று இன்றைய தினத்தை பகிர்ந்திருந்தார். அதன்படி இன்று இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. பலரும் யோசித்தது போல் அது அவரின் திருமணம் தொடர்பான தகவல் கிடையாது.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தின் அறிவிப்பு ஆகும். இந்த திரைப்படத்தை வனிதா விஜயகுமார் தானே இயக்கி தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில்தான் ராபர்ட் மாஸ்டர் நடித்து வருகிறார். மேலும் வனிதா விஜயகுமார் பகிர்ந்திருந்த புகைப்படம், இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் புகைப்படம் என்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் வனிதா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Next Story