சௌந்தர்யா வழக்கில் ஹிண்ட் கொடுத்த வனிதா விஜயகுமார்.. இப்படியா சூட்சமம்?
எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் சிட்டிபாபு என்பவர் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மீது சௌந்தர்யா வழக்கில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார். ஆனால் அது விபத்து இல்லை. கொலை என சிட்டிபாபு அவர் கொடுத்த புகாரில் கூறியிருக்கிறார். அதற்கு காரணம் மோகன் பாபு தான் என்றும் அவர் மீது புகாரை அளித்து இருக்கிறார். சௌந்தர்யாவின் ஆறு கிரவுண்ட் நிலத்தை மோகன்பாபு வாங்க திட்டமிட்டதாகவும் அதற்கு சௌந்தர்யா தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பதாலும் இந்த நில தகராறில் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகவும் அதனால் தான் அந்த ஹெலிகாப்டர் விபத்தை திட்டமிட்டே மோகன்பாபு ஏற்படுத்தினார் எனவும் சிட்டிபாபு கூறினார்.
இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கு எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என தெரியவில்லை. சௌந்தர்யாவின் ரத்த சொந்தங்கள் அதாவது அவருடைய உடன் பிறந்தவர்கள் கணவர் இவர்கள் யாரேனும் இந்த புகாரை கொடுத்திருந்தால் காவல்துறை உடனடியாக மோகன்பாபு மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் எந்தவித சம்பந்தமே இல்லாத ஒரு நபர் இப்படி ஒரு புகாரை கொடுக்கும் பொழுது மோகன் பாபு மீது நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இதை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும் .இது ஒரு பக்கம் இருக்கடும் வனிதா விஜயகுமார் முன்பு ஒரு பேட்டியில் போற போக்கில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு சென்றார். அது யாருமே சீரியஸாக எடுக்கவில்லை .இப்போதும் அதை சீரியஸாக பார்க்க மாட்டார்கள். அது என்னவெனில் மஞ்சுளா பீக்கில் இருக்கும் பொழுது சிவாஜி எம்ஜிஆர் இவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு கார் டிரைவர் இறந்து போனார். இதற்கும் என் அப்பாவிற்கும் தொடர்பு இருக்கிறது என கூறியிருந்தார் வனிதா விஜயகுமார். இந்த விஷயத்தை யாருமே அன்று சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை .
ஏனெனில் ஏதோ விஜயகுமார் மீது இருந்த ஒரு ஆத்திரத்தில் வனிதா விஜயகுமார் அப்படி கூறிவிட்டார் என்று தான் அனைவரும் எடுத்துக் கொண்டார்கள் .ஆனால் இதை என்ன ஏதுன்னு விசாரித்தால் அது ஒரு புதிய கோணத்தில் போக வேண்டிய ஒரு வழக்காக கூட இருக்கலாம் .இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் சிட்டிபாபு இப்போது புகார் கொடுத்து இருக்கிறார். இந்த புகாரில் அவர் ஒரு விஷயம் சொல்கிறார். இப்போது மோகன் பாபு இருக்கிற வீடு சௌந்தர்யாவின் வீடுதான். இந்த வீடு சம்பந்தமாக தான் மோகன் பாபுவுக்கு சௌந்தர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அவர் இறந்த பிறகு அந்த வீட்டை மோகன் பாபு வாங்கிவிட்டார். இப்பொழுது அந்த வீட்டை மீட்டெடுத்து மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சுவிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த புகாரியில் சிட்டிபாபு கூறி இருக்கிறார். ஏற்கனவே மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு போய்க்கொண்டிருக்கின்றது. அதற்கேற்ப சிட்டிபாபுவும் இந்த வீட்டை மீட்டெடுத்து மோகன் பாபுவின் மகன் மஞ்சுவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியதை பார்க்கும் பொழுது விஷ்ணு மஞ்சுவே அந்த சிட்டிபாபுவை தூண்டிவிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்ய சொல்லி இருப்பாரோ என்ற சந்தேகமும் வருகிறது.
ஏனெனில் அப்பா அம்மா மகனோ மகளோ இப்படி ஒரு குடும்பமாக இருக்கும் பொழுது அந்த வீட்டில் நடக்கிற எந்த காரியம் ஆனாலும் அந்த மகன்களுக்கோ மகள்களுக்கோ தெரியாமல் இருக்காது. அப்போ விஷ்ணு மஞ்சு இப்படி ஒரு செயலை செய்ய சொல்கிறார் என்றால் சௌந்தர்யா வழக்கில் அவருக்கு தெரிந்த சில உண்மைகள் கண்டிப்பாக இருக்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கோணத்தில் வழக்கை விசாரித்தால் மோகன் பாபு சௌந்தர்யா வழக்கில் ஏதாவது செய்தாரா இல்லையா என்பது நமக்கு தெரிய வரும் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.இதே மாதிரி தான் வனிதா விஜயகுமார் சொன்னதை பார்க்கும் போது அவருக்கு தெரிந்து எதாவது நடந்திருக்கும். அதனால்தான் அந்த டிரைவர் மரணத்திற்கும் விஜயகுமாருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் என்றும் அந்தணன் கூறினார்.