Vanitha vijayakumar: வனிதா விஜயகுமார் போல சர்ச்சையில் சிக்கியவர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் அவரின் திருமண வாழ்க்கையில் அவர் எடுத்த சில முடிவுகள்தான். மூன்று திருமணங்கள் செய்தும் அது அவருக்கு சரியாக அமையவில்லை.
இந்நிலையில்தான், அவர் ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், அது வனிதா இயக்கி நடித்து வரும் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்’ என்கிற புதிய படத்தின் புரமோஷன் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. வனிதா சில வருடங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் அவரின் முதல் மனைவி அந்த திருமணத்தை எதிர்த்தார். அதோடு, காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து வனிதாவை காவல் நிலையம் செல்ல வைத்தார். இதையடுத்து தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாக களம் இறங்கி வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
எனவே, அவர்கள் எல்லோருடனும் கடுமையாக சண்டை போட்டார் வனிதா. லட்சுமி ராமகிருஷ்ணனை ‘நீ யாருடி என் பிரச்சனையில் தலையிட?’ என ஒருமையில் பேசி வனிதா திட்ட ‘ஆளவிடுறா சாமி’ என ஒதுங்கினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதேபோல், ரவீந்தருடன் சண்டை போட்டார் வனிதா.
இப்போது ரவீந்தர் பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே போயிருக்கிறார். அவர் பிக்பாஸ் டாஸ்க்குகளை எப்படி செய்யப்போகிறார்? என்னென்ன விமர்சனங்களை சந்திக்கப்போகிறார் என்பது இனிமேல்தான் தெரியவரும். இந்நிலையில், ரவீந்தருக்கு பிக்பாஸ் வாய்ப்பை வாங்கி கொடுத்தவரே வனிதாதான் என்பது தெரியவந்திருக்கிறது.
இதுபற்றி பேசியுள்ள வனிதா ‘நடந்தது நடந்துவிட்டது. ரவீந்தர் என் தம்பி மாதிரி. நான்தான் சிபாரிசு செய்து அவருக்கு பிக்பாஸுக்கு அனுப்பி இருக்கேன். இதுக்கு முன்னாடி 2 வருஷமா அவரை கூப்பிட்டாங்க. ஆனால், அவரால போக முடியல. அவர் போகணும்னு நினைக்கும்போது விஜய் டிவி சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. அப்புறம்தான் நான் சிபாரிசு செஞ்சேன்’ என சொல்லி இருக்கிறார் வனிதா.
தன்னை கடுமையாக விமர்சித்ததையும் மறந்து ரவீந்தருக்கு வனித செய்து உதவிய நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…