பிக்பாஸில் அப்டேட் கொடுக்கப்போகும் வனிதா... விஜய் சேதுபதியே இத பார்த்துட்டு தான் தூங்க போவாராம்ல...!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சந்தோஷம், சோகம், அழுகை, காதல் உள்ளிட அனைத்தையும் தினமும் பார்க்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 2 தினங்களில் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது தொடர்பான தகவல்கள் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் கடந்த 7 சீசன்களையும் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த முறை புதிய ஆங்கராக விஜய் சேதுபதி களம் இறங்கி இருக்கின்றார். இதன் துவக்க விழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கின்றது. கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி இருப்பதால் பிக் பாஸ் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்கின்ற பெயரில் நடிகர் விஜய் சேதுபதி களம் இறங்கி இருக்கின்றார்.
இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு புறம் விஜய் டிவி, பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப் பிரபலமான வனிதா விஜயகுமார் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டு வீடியோவில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் அதன் ரிவ்யூவை கூற இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய ரிவியூவை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பதாகவும், அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதியே தனது ரிவ்யூவை பார்த்துவிட்டு தான் தினமும் தூங்கப்போவார் என கூறியிருக்கின்றார்.
இதை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் போட்டியாளர்கள் யார் யார் பங்கேற்க போகிறார்கள், யாரின் கணிப்பு சரியாக இருக்கின்றது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இந்த முறை விஜய் சேதுபதிக்காகவே நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.