அவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்... கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

நிக்கோலாய்க்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து மகள் இருக்கிறார். தற்போது வரலட்சுமியுடன் அவருக்கு நடைபெற்றுள்ள திருமணம் 2-வது திருமணம் ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தில் இந்து முறைப்படி வேட்டி சட்டையில் நிக்கோலாயும் பட்டுப்புடவையில் வரலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து சென்னையில் உள்ள லீலா பேலஸில் இருவருக்கும் ரிஷப்ஷன் நடைபெற்றது. இதில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்தநிலையில் நிக்கோலாயை தற்போது நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர். அதற்கு காரணம் என்னவெனில் அவர் சட்டை போடாமல் ஸ்லீவ்லெஸ் பனியன் ஷார்ட்ஸ் உடன் போஸ் கொடுப்பது அவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்பா... கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!தான்.

ரிஷப்ஷனிலேயே இப்படித்தான் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக நடிகைகள் தான் இதுபோல ஸ்லீவ்லெஸ்களில் போஸ் கொடுக்க ஆர்வம் காட்டுவர். ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது.

ரிஷப்ஷன் தொடங்கி சமீபத்திய புகைப்படங்கள் வரை அவர் இதுபோலத்தான் போஸ்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் போட்டுருக்க டாட்டூ தெரியணும்னு இப்படி போஸ் கொடுக்கிறாரா? என நிக்கோலாயை பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.

இனிமேலாவது இதுபோல புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை அவர் மாற்றிக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

Next Story