பார்க்கத்தான் முரட்டு ஆள்... ஆனா பேச்சு தங்கம்... சரத்குமார் மருமகனால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:59:55  )
varalakshmi
X

சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கு சமீபத்தில் தாய்லாந்தில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று வரலட்சுமி தன்னுடைய கணவர் மற்றும் தந்தை சரத்குமார் உடன் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்.

அந்த சந்திப்பில், வரலட்சுமி கணவர் நிக்கோலாய் சச்தேவ் கூறுகையில், என் மனைவி வரலட்சுமி என்னிடம் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என கூறினார். ஆனால் அவர் பெயர் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று தான் இருக்க வேண்டும்.

அவருக்காக நான் என்னுடைய பெயரை நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சத்தேவ் என மாற்ற இருக்கிறேன். சரத்குமார் என்பது லெகசி. அதை மாற்றக்கூடாது. வரலட்சுமி நாளிலிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். எதுவும் மாறவில்லை.

நான் அவருடைய முதல் காதலும் இல்லை பிடித்த காதலும் இல்லை. ஏனெனில் வரலட்சுமிக்கு சினிமா தான் முதல் காதல். அதனால் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார். அதற்கு நானும், அவர் தந்தையும் எப்போதும் உறுதுணையாக இருப்போம். வந்தவர்கள் சாப்பாடு, தண்ணி குடித்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்.

அவர் சாதாரண தண்ணியை சொன்னார் என பின்னால் வரலட்சுமி சிரித்துக் கொண்டே அதை சரி செய்த விதம் பார்ப்பவர்களை கலகலப்பில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து பேச எழுந்த வரலட்சுமி, நிக்கோலாய் தான் என் காதல். ஆனால் சினிமா தான் என் உயிர்.

நான் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிப்பேனா என கேள்வி அடிக்கடி எழுந்தது. தற்போது அதற்கு அனைவருக்கும் பதில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பாக நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவேன் எனவும் குறிப்பிட்டார். வரலட்சுமி திருமண அறிவிப்பு வந்ததில் இருந்தே நிக்கோலாய் உருவம் குறித்து பல விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது அவர் பேச்சு பலரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Next Story