நடிகையிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்டாரா நகுல்? பழிக்குபழி வாங்கிய இயக்குனர்..
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் நகுல். தற்போது இவரின் நடிப்பில் வாஸ்கோடாகாமா திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. கிருஷ்ணன். இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சந்த்ரு. இவர்தான் இப்போது நகுலை பற்றி கடுமையாக பேசி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வாஸ்கோடாகாமா படத்தில் பணிபுரிந்திருக்கிறாராம் சந்த்ரு.
இந்த பழக்கத்தின் காரணமாக பார்வையற்றவர்களுக்காக ஒரு படத்தில் நகுலை நடிக்க வைத்த சந்த்ரு கேட்க முதலில் நகுல் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் படத்தின் இயக்குனரிடம் கோபமாக இதை பற்றி பேச படத்தில் இருந்தே தூக்கிவிட்டாராம் இயக்குனர். இந்த கோபத்தில் அந்த உதவி இயக்குனர் சந்த்ரு நகுலை பற்றிய அந்தரங்கள் எல்லாம் எனக்கு தெரியும் என்றும் அதை பற்றி புகார் செய்வேன் என்றும் கூறி வருகிறார்.
அந்தரங்கம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம்தானே என்று கேட்டால் அதற்கு சந்த்ரு சூட்டிங் ஸ்பாட்டில் செய்ததை சொல்வேன் என கூறி வருகிறார். சரி அப்படி என்னதான் நடந்தது என்று கேட்டால் அதற்கு சந்த்ரு சொல்ல விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாஸ்கோடாகாமா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இரவின் நிழல் புகழ் பிரிகிடாதான் நடிக்க இருந்ததாம்.
கொஞ்ச நாள்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் பிரிகிடா.வரும் போதேல்லாம் அவர் அப்பாவுடன் தான் வருவாராம் பிரிகிடா. இது நகுலுக்கு சங்கோஜமாக இருந்திருக்கிறது. உடனே இயக்குனரை அழைத்து இனிமேல் அவர் அப்பா உடன் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னதாகவும் அட்ஜெஸ்மெண்டுக்கும் பிரிகிடா ஒத்து வரமாட்டார் என்று நகுல் கூறியதாகவும் சந்த்ரு கூறியிருக்கிறார்.
அட்ஜெஸ்மெண்டுக்கு வளையாததால்தான் படத்தில் இருந்தே பிரிகிடாவை தூக்க வைத்தார் நகுல் என்றும் சந்த்ரு கூறியிருக்கிறார். இது மட்டுமில்லை. இன்னும் நகுலை பற்றி நிறைய அந்தரங்கள் இருக்கின்றன. அதை எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு வந்து சொல்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடிக்க கேட்டு அதன் மூலம் வந்த பிரச்சினையால்தான் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் என்னை அழைக்கவில்லை. டைட்டிலிலும் என் பேர் போடவில்லை என்று சந்த்ரு கூறினார்.
கிட்டத்தட்ட இரண்டு வருட உழைப்பு. என் பேரு போடலைனா எப்படி இருக்கும்? இதற்கெல்லாம் காரணம் நகுல்தான் என்றும் இன்னும் என்னெல்லாம் சொல்லப் போகிறேன் பாருங்கள் என்றும் சவால் விட்டு பேசி வருகிறார் அந்த உதவி இயக்குனர் சந்த்ரு.