அவ்ளோ பெரிய சம்பவக்காரனாடா நீ!.. கூஸ்பம்ஸ் ஏத்தும் வீர தீர சூரன் கிளிம்ப்ஸ் வீடியோ!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:51  )

Veera dheera sooran: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் விக்ரம். அந்த ஒரு படமே அவருக்கு ரசிகர்களை கொண்டு வந்தது. அதன்பின் தில், தூள், சாமி என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். ஒரு பக்கம் கமர்சிஷல் படங்களில் நடித்தாலும் கமலை போல நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற தாகம் எப்போதும் விக்ரமுக்கு உண்டு.

அதனால்தான் சினிமாவில் வளரும் சமயத்திலும் காசி போன்ற படங்களில் நடித்தார். அந்நியன், பிதாமகன், ஐ போன்ற படங்களை பார்த்தால் நடிப்பின் மீது அவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பது தெரியவரும். பிதாமகன் படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார் சியான் விக்ரம்.

ஐ படத்தில் உடல் எடையை 50 சதவீதத்திற்கும் மேல் குறைத்து அதிர வைத்தார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதோடு, அவருக்கு அந்த படத்திற்கு விருதும் வழங்கப்படவில்லை. கமல் தசாவதாரம் படத்தில் செய்தது போல கோப்ரா படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் வந்து கலக்கினார் விக்ரம்.

ஆனால், அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இப்போது சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். 2 பாகங்களாக இப்படம் உருவாகி வரும் நிலையில் இதுவரை இல்லாத மாதிரி இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள்.

இந்த படத்தில் விக்ரமோடு எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் போல உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ஃபைவ் ஸ்டர் செந்தில் பெற்றிருக்கிறார். இவர் ஒரு பிரபல வினியோகஸ்தர்.

இந்த தகவலை வெளியிட்டு அதோடு படத்தில் வரும் சில காட்சிகளையும் கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ‘நீ எத்தனை சம்பவம்டா பண்ணி இருக்க?’ என போலீஸ் கேட்க விக்ரம் தனது ஒவ்வொரு விரலாக விட்டு எண்ணிக்கொண்டே இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. வீர தீர சூரன் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

Next Story