விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றது. படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். அப்பா மகன் கேரக்டரில் நடிப்பதால் மகன் கேரக்டருக்காக டி – ஏஜிங் டெக்னிக்கை பயன்படுத்தி மகன் கேரக்டரை டிசைன் செய்திருக்கிறார்கள்.
படத்தின் மூன்றாவது சிங்கிளில் அந்த டி – ஏஜிங் டெக்னிக் நன்றாகவே தெரிந்தது. அதை பலரும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். நல்லா இருந்த விஜயை இப்படி ஆக்கிட்டீங்களே என்று கூறி வருகிறார்கள். தொடர்ந்து மூன்று சிங்கிள்கள் வெளியாகியும் கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
யுவனையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காது என்றும் சில செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. ஆனால் வெங்கட் பிரபு இப்போது அவருடைய ஸ்டோரியில் கோட் படத்தின் ப்ரோமோஷன் குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இதுவரை இல்லாத தமிழ் சினிமாவில் முதன் முறையாக கோட் படத்திற்குத்தான் இப்படி ஒரு ப்ரோமோஷன் என்று கூறியிருக்கிறார். அதாவது வானில் 14000 அடி உயரத்தில் கோட் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற போவதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன் ரஜினியி கபாலி படத்தை ப்ரோமோட் செய்ய ஏர்கிராஃப்ட்டில் கபாலி பட புகைப்படத்தையும் ரஜினியின் புகைப்படத்தையும் ஒட்டி வித்தியாசமான முறையில் ப்ரோமோட் செய்திருந்திருந்தார்கள். அந்த விமானத்தை போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தினார்கள்.
அதன் பிறகு கோட் படத்திற்குத்தான் இப்படி ஒரு ப்ரோமோஷன் என்று சொல்லப்படுகிறது. வானில் 14000 அடி என்றால் ஒன்று விமானம் மூலம் எதுவும் ப்ரோமோஷன் செய்யப் போகிறார்களா? அல்லது அவ்வளவு உயரத்தில் பலூன் பறக்கவிட்டு ப்ரோமோட் செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் இவ்வளவு உயரம் வரை கோட் படத்திற்குத்தான் முதன் முதலில் இப்படி ஒரு ப்ரோமோஷன் என வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். அதுவும் மலேசியாவில் அந்த ப்ரோமோஷன் நடக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…
Delhi Ganesh:…
கங்குவா படம்…