கோட் சமயத்தில் அடித்த லக்.. அவர நம்பி நாசமா போனதுதான் மிச்சம்!.. வேதனையில் புலம்பும் வெங்கி..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் என்கின்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் முதன் முதலாக இயக்கிய சென்னை 600028 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இளைஞர்களை மையமாக வைத்து ஜாலியான கதைகளை இயக்கி வந்த வெங்கட் பிரபு மங்காத்தா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக நடிகர் விஜய்யை வைத்து கோட் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
மேலும் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் கடந்த வருடம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கடந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம் என்கின்ற பெருமையை கோட் திரைப்படம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருந்தார். அதனால் தான் கோட் திரைப்படத்தில் கூட ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். கோட் திரைப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயனை வைத்து இந்த திரைப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு சிவகார்த்திகேயன் கால்சீட் கிடையாது என்பதுதான் உண்மை. இதனை சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரபுவிடம் கூறிவிட்டாராம். அடுத்து இரண்டு வருடத்திற்கு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூறியதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகின்றார். ஏனென்றால் கோட் திரைப்படம் இயக்கிக் கொண்டிருந்தபோதே பல வாய்ப்புகள் வெங்கட் பிரபுவை தேடி வந்தது.
தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் 5 கோடி ரூபாய் பணத்தை கையில் வைத்துக் கொண்டு வெங்கட் பிரபுவை கமிட் செய்வதற்கு காத்திருந்தார். அது மட்டுமில்லாமல் தமிழிலும் இரண்டு ப்ரொடியூசர்கள் அவரை வைத்து படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்தார்கள்.
ஆனால் அடுத்த திரைப்படம் சிவகார்த்திகேயனுடன் என்பதால் இதை அனைத்தையும் மறுத்து இருக்கின்றார் வெங்கட் பிரபு. தற்போது சிவகார்த்திகேயன் டாடா காட்டிவிட்டு சென்றதால் அடுத்து எந்த திரைப்படத்தை இயக்குவது, என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கின்றாராம்