தளபதியை காலி பண்ணது பத்தலையோ… தலைவருக்கு குறி வச்ச வெங்கட் பிரபு…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:23  )

Venkat prabhu: நடிகர் விஜயின் கோட் படத்தினை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது டைரக்ட் செய்ய இருக்கும் முக்கிய படம் குறித்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய குடும்பத்தில் இருந்து முதலில் நடிக்க வந்தவர் தான் வெங்கட் பிரபு. ஆனால் அவருக்கு நடிப்பு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதையடுத்து புதுமுக நடிகர்களை வைத்து சென்னை28 படத்தினை இயக்கினார்.

இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக புதுமுக நடிகர்களை கொண்டே சரோஜா, கோவா படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். படம் சூப்பர்ஹிட் அடித்தது. தொடர்ந்து சூர்யாவை வைத்து மாஸ், கார்த்தியை வைத்து பிரியாணி படத்தினை இயக்கினார்.

இரண்டுமே சுமார் வெற்றியை பெற்றது. தொடர்ந்து அஜித்தின் 50வது திரைப்படமான மங்காத்தா படத்தினை இயக்கினார். இப்படம் சூப்பர்ஹிட் வெற்றி படமாக அமைந்தது. அடுத்த பெரிய இடைவேளைக்கு பிறகு மாநாடு என்னும் வெற்றி படத்தினை கொடுத்தார்.

இதையடுத்து அவருக்கு விஜயின் 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தினை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ சிவகார்த்திகேயனாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வெங்கட் பிரபு தன்னுடைய அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story