ரிலீஸுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இன்னும் பெஸ்டா கொடுத்திருப்பேன்.. கோட் பற்றி VP

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:15  )

விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது, குறிப்பாக தமிழ் ரசிகர்கள் கோட் திரைப்படத்தை பெரிய அளவில் கொண்டாடி தீர்த்தனர்,

மற்ற மாநிலங்களில் கோட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும் இது முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படம் என்பதை வெங்கட் பிரபு கூறி இருந்தார் .அதை சிறப்பாக செய்தும் காட்டி இருந்தார்.

படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் வருவதும் அவ்வப்போது அஜித்தின் ரெபரன்ஸ் படங்களில் தெரிவதும் என எல்லா ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படமாக கோட் திரைப்படம் அமைந்தது. யாரும் எதிர்பார்க்காத வில்லன் கதாபாத்திரத்தில் மோகன் நடித்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

படம் வெளியாகி பல வித ட்ரோலுக்கும் உள்ளானது. முன்பு வெளியான சில திரைப்படங்களை கம்பேர் செய்து இது அந்த படத்தின் காப்பி இந்த படத்தின் காப்பி என மற்ற ரசிகர்கள் கோட் திரைப்படத்தை விமர்சித்து வந்தனர். ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ராஜதுரை படத்தை போலவே சில காட்சிகளும் கோட் திரைப்படத்தில் அமைந்திருந்தது .

இந்த நிலையில் இதைப் பற்றி வெங்கட் பிரபு சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருப்பது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது கோட் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் ராஜதுரை படத்தை போலவே இருப்பதை உணர்ந்தேன் .இது ரிலீஸ் ஆவதற்கு முன்பே எனக்கு தெரிந்திருந்தால் கோட் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக செய்திருப்பேன் என கூறியிருக்கிறார்.

Next Story