காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு அல்வா!.. எஸ்.கே.25 படத்தை தட்டி தூக்கிய இயக்குனர்!. வட போச்சே!..
Sivakarthikeyan 25: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். குறுகிய காலகட்டத்தில் சீனியர்களை பின்னுக்கு தள்ளி அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். இவரின் வளர்ச்சியை பார்த்து பல நடிகர்களும் பொறாமை பட்டனர். இவரை பார்த்துதான் ‘நாமும் ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது’ என களமிறங்கினார் சந்தானம்.
ஆனால், அவரால் ஹீரோவாக வெற்றியை பெறமுடியவில்லை. இப்போது 40 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இடையில் சில படங்களை தயாரித்து 100 கோடி கடனாளியாகவும் மாறினார். பல படங்களிலும் நடித்து அந்த கடனையெல்லாம் அடைத்திருக்கிறார்.
கமர்ஷீயல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது ரசிகர்களிடம் தனது இமேஜை மாற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களை பார்த்தாலே அது புரியும். ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இனிமேல், பெரிய இயக்குனர்கள் மற்றும் நல்ல கதைகளில் மட்டுமே அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்திலிருந்து சூர்யா விலகவே அந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது. இடையில் அந்த கதையில் நடிக்க தனுஷும் ஆர்வம் காட்டினார். ஆனால், இப்போது அவரிடம் கால்ஷீட் இல்லை. எனவே, முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இது அவரின் 25வது திரைப்படமாகும்.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 25வது படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. கோட் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்தான், இந்த வாய்ப்பு சுதாவுக்கு போயிருக்கிறது. ஆனாலும், எஸ்.கே.வின் 26 அல்லது 27வது படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.