முன்னயே தெரிஞ்சிருந்தா வேற மாதிரி எடுத்திருப்பேன்!.. வெங்கட்பிரபு சொல்றத கேளுங்க!...
Goat: சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. இவர் பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மகன் இவர். நண்பர்களை வைத்துக்கொண்டு ஜாலியாக படமெடுப்பது இவரின் பழக்கம்.
சென்னை 28 ஹிட் அடிக்கவே சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை இயக்கினார். அஜித்துக்கு மங்காத்தாவும், சிம்புவுக்கு மாநாடும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின்னர்தான் விஜயுடன் இணைந்து கோட் படத்தை கொடுத்தார் வெங்கட்பிரபு.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது. வெங்கட்பிரபு இயக்கியதிலேயே மிகவும் அதிக பட்ஜெட் கொண்ட படம் இதுதான். ஏனெனில், விஜயின் சம்பளம் மட்டுமே 200 கோடி என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இளமையான விஜய், அதற்கு ஏஐ டெக்னாலஜி என விளையாடியிருந்தார் வெங்கட்பிரபு.
விஜய்க்கு விஜயே வில்லனாக நடித்திருந்தார். விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதாலும், குடும்பம் குடும்பமாக விஜயின் படங்களை பார்ப்பார்கள் என்பதாலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. அதேநேரம், இந்த படம் ஹாலிவுட்டில் வந்த ஜெமினி மேன் படத்தின் காப்பி என சிலர் சொன்னார்கள்.
சிலரோ, விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய ராஜதுரை படத்தின் காப்பி என்றார்கள். ஆனால், இதுபற்றி வெங்கட்பிரபு எங்கேயும் பேசாமல் இருந்தார். இப்போது ஒரு விழாவில் பேசிய அவர் ‘ராஜதுரை என ஒரு படம் இருக்கிறது. அந்த படத்தின் கதை கோட் பட கதையோடு ஒத்து போகிறது என்பது கோட் படத்தின் ரிலீஸுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. தெரிந்திருந்தால் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்திருப்பேன்.
அப்பா - மகன் கதை என்பதை உலகமெங்கும் பலரும் எடுத்திருக்கிறார்கள். அந்த உணர்வு ஒன்றுதான். ஒருவரை போலவே மற்றொருவர் யோசிப்பார் என்பது இயல்புதான். அதை தவிர்க்க முடியாது’ என சொல்லி இருக்கிறார்.