Mask: கவின்-ஆண்ட்ரியா நடிக்கும் 'மாஸ்க்'... இவங்கதான் ப்ரொடியூசராம்... அப்ப வெற்றிமாறன் இல்லையா?...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:12  )

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் கவின். தற்போது அவர் நடிப்பில் உருவான பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கவின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிச்சைக்காரனாக முதல் 40 நிமிடம் நடித்து பலரையும் சிரிக்க வைத்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். படம் மொத்தமே 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 4 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அந்த வகையில் வைத்து பார்த்தால் இந்த திரைப்படம் தற்போது லாபமான படமாக இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் நடிகர் கவின் கையில் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார். ஆண்ட்ரியா உடன் மாஸ்க், நயன்தாராவுடன் ஹாய், கிஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

ஸ்டார் படத்தை தொடர்ந்து கவின் கமிட்டான திரைப்படம் மாஸ்க். இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம், பிளாக் மெட்ராஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகின்றார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கின்றார். இப்படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் கவினை காட்டிலும் ஆண்ட்ரியாவுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. மேலும் இப்படத்தில் சார்லி, ரூஹானி ஷர்மா, அர்ச்சனா, பால சரவணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்திலிருந்து ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது வெற்றிமாறன் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ரியாவின் தோழிகள்தான் இப்படத்தை தயாரிக்கிறார்கள். எந்த ஒரு சினிமா அனுபவமும் இல்லாமல் படத்தை தயாரிப்பது என்பது சரியாக இருக்காது என்று எண்ணிய ஆண்ட்ரியா வெற்றிமாறனிடம் அழைத்து சென்றிருக்கின்றார்.

அவரது பேனரில் திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை கூறி இருக்கின்றார். அந்த வகையில் வெற்றிமாறனின் தயாரிப்பு பேனரை மட்டும் வைத்துக்கொண்டு முதலீடுகள் அனைத்தையும் ஆண்ட்ரியாவின் தோழிகள் செய்து வருவதாக கூறப்படுகின்றது. இப்பொழுது லாப நஷ்டங்கள் அனைத்துமே அவர்களுக்கு தான் சேரும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனை வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கின்றார்.

Next Story