தனுஷ் பணம் கேட்டாரா?!. வாடிவாசல் வருமா?!.. சிம்பு படம் கதை என்ன?!.. வெற்றிமாறன் விளக்கம்..

Published on: August 8, 2025
---Advertisement---

சிம்புவை வைத்து வெற்றிமாறன் எடுக்கும் படம் பற்றிய தகவல்தான் இப்போது வைரலாகி வருகின்றன. அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அந்த படம் வட சென்னை படத்தை சுற்றி அமையும் கதையாக இருப்பதால் அந்தப் படத்திற்காக தனுஷிடம் வெற்றிமாறன் NOC கேட்டதாகவும் அதற்கு தனுஷ் 20 கோடி கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் தனுஷ் வடசென்னை யுனிவர்ஸில் படம் பண்ணினாலும் பரவாயில்லை. அல்லது ஸ்டண்ட் அலோன் படமாக இருந்தாலும் சரி. நான் NOC கொடுக்கிறேன் என்று சொன்னாராம். ஆனால் பணம் எதுவும் தனுஷ் கேட்கவில்லை என திட்டவட்டமாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஆனால் வெளியில் நெகட்டிவாக சில விஷயங்கள் பரவி வருகின்றன. அது உண்மையில்ல்லை என்றும் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

வடசென்னை கதைகளம்: வடசென்னை படத்தை பொறுத்தவரைக்கும் முதலில் அன்பு கேரக்டரில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. குமார் கேரக்டருக்குத்தான் தனுஷை வெற்றிமாறன் அழைத்திருக்கிறார். குமார் கேரக்டரை பொறுத்தவரைக்கும் படத்தில் 30 நிமிடம் மட்டுமே வரக்கூடிய கேரக்டர். அதனால் தனுஷ் நான் பெருந்தன்மையானவன் தான். ஆனால் அந்தளவுக்கு பெருந்தன்மை இல்லை என்று சொல்லி மறுத்திருக்கிறார். அதன் பிறகு அன்பு கேரக்டரில் தனுஷ் நடித்தார். வடசென்னை 2 படமும் அன்புவின் எழுச்சியாகத்தான் இருக்கும். அதில் தனுஷ்தான் நடிப்பார் என வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

வாடிவாசல்:வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்திற்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாடிவாசல்தான் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாடிவாசல் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அது ஒரு சரியான புள்ளியில் வர இன்னும் நேரம் தேவைப்படுகிறது. அதனால் சிம்பு கால்ஷீட் இருக்கிறது. படம் பண்றீயா என தாணு கேட்டதும் சிம்புவுடன் இணைய வாய்ப்பு வந்தது என வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

vaadivasal

vaadivasal

சிம்பு வெற்றிமாறன் கூட்டணி: சிம்புவை வைத்து எடுக்கும் படம் ஒரு வேளை வடசென்னை 2 படமாக இருக்குமா என்றுதான் அனைவரும் கேட்டு வந்தனர். ஆனால் ஸ்டாண்ட் அலோன் படமாகத்தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை படத்தின் சாயலும் படத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment