Categories: latest news

சூர்யாவை கடுப்பாக்கிய வெற்றிமாறன்!.. வாடிவாசல் படத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்!…

Vaadivaasal: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், வட சென்னை, அசுரன், விடுதலை போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக அமைந்தது. அதோடு, இவரின் இயக்கத்தில் நடித்து தனுஷ் 2 தேசிய விருதுகளையும் வாங்கினார். எனவே, வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே ஆசைப்படுகிறார்கள்.

தெலுங்கு பட ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆரே தமிழ்நாட்டுக்கு வந்தபோது ‘வெற்றிமாறன் சார்.. என்னை வச்சி ஒரு படம் எடுங்க சார்.. தமிழ், தெலுங்கு ரெண்டிலும் டப் பண்ணலாம் சார்’ என கேட்டார். அந்த அளவுக்கு வெற்றிமாறனின் இயக்கம் பலருக்கும் பிடித்திருக்கிறது.

அதேநேரம் படமெடுக்க வெற்றிமாறன் அதிக காலம் எடுத்துக்கொள்வார். ஒரு படத்தை 2 வருடங்கள் எடுப்பார். விடுதலை படத்தில் 8 நாட்கள் மட்டும் நடிக்க வந்த விஜய் சேதுபதி முதல் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து பல மாதங்கள் நடித்தார். எதையும் திட்டமிட்டு படமெடுக்கும் பழக்கம் வெற்றிமாறனுக்கு கிடையாது.

அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை எடுப்பார். பிடிக்கவில்லை என்றால் கதையை மாற்றுவார். ‘அப்பாடா ஷூட்டிங் ஓவர்’ என நடிகர்கள் சந்தோஷமானால் ‘ஒத்துக்க முடியாது. எல்லா கோட்டையும் அழிங்க.. நான் மறுபடியும் எடுக்கிறேன்’ என சொல்லி அதிர்ச்சி கொடுப்பார். அதனாலேயே இவரிடம் மாட்டும் நடிகர்கள் அவதிப்படுவார்கள். விஜய் சேதுபதியிடமும், சூரியிடமும் இதைக்கேட்டால் சொல்வார்கள்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக 4 வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. ஆனால், இப்போதுவரை ஷூட்டிங் துவங்கப்படவில்லை. பொறுத்து பொறுத்து வெறுத்துப்போன சூர்யா வெற்றிமாறனுக்கு போன் போட்டு ‘வாடிவாசல் எப்ப ஸ்டார்ட் பண்றீங்க?.. எப்ப முடிப்பீங்க?.. எனக்கு டீட்டெய்ல் கொடுங்க. நான் கால்ஷீட் தரேன்’ என சொல்லியிருக்கிறார்.

படம் எடுத்து முடுக்க 2 வருடங்கள் ஆகும் என வெற்றிமாறன் சொல்ல ‘2 வருஷம் ஓகே. ஆனா, ஒரு பார்ட்தான் எடுக்கணும். நீங்க ரெண்டாவது பார்ட் எடுத்தா என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது. அதேமாதிரி, 2 வருசத்துல நீங்க கண்டிப்பா முடிச்சிடுவீங்களா?’ எனக்கேட்க வெற்றிமாறன் மழுப்பலான பதிலை சொல்லியிருக்கிறார். இது சூர்யாவுக்கு அதிருப்தியை கொடுக்க வாடிவாசல் படம் டிராப் என்கிற நிலை உருவாகிவிட்டது. அடுத்து சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் படத்திற்காக ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை விலைக்கு வாங்கி பயிற்சி எடுத்தார் சூர்யா. அதோடு, அமெரிக்காவுக்கு போய் இப்படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் வேலைகளை ஆலோசித்துவிட்டு வந்தார்கள். ஆனால், படம் டிராப் ஆகியிருப்பது சூர்யா ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

4 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

6 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

9 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

21 hours ago