Vettaikaran: வேட்டைக்காரன் படத்தில் முக்கிய ஹீரோவாக நடித்த பிரபலத்தின் மனைவியும் ஒரு முக்கிய ஹீரோயின் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குருவி படத்தில் உதவி இயக்குனராக இருந்த சிவபாலன் இயக்கிய திரைப்படம் வேட்டைக்காரன். இப்படத்தினை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தது. முதலில் இப்படத்திற்கு போலீஸ் ரவி என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் வேட்டைக்காரன் என்ற பெயரே வைக்கப்பட்டது.
இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி முதல்முறையாக ஜோடியாக நடித்தார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார். இப்படத்தில் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. முதல்முறையாக தன்னுடைய மகன் சஞ்சீவை ஒரு பாடலுக்கு சின்ன கேமியோ ரோலில் நடிக்க வைத்தார் விஜய்.
தூத்துக்குடியை சேர்ந்த ரவி என்ற இளைஞராக விஜய் நடித்திருப்பார். எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜ் போல ஆக வேண்டும் என சென்னை வந்து என்ன நடக்கிறது என்பதுதான் கதையாக இருக்கும். இதில் தேவராஜ் ஐபிஎஸ்ஸாக ஸ்ரீஹரி என்ற தெலுங்கு நடிகர் நடித்திருப்பார்.
இதுகுறித்து நடிகை டிஸ்கோ சாந்தி கூறும்போது, வேட்டைக்காரன் படத்தில், என்னுடைய கணவரை நடிக்க வேண்டாம் என சத்தம் போட்டேன். எனக்கு ஒரு ஹீரோவாக நடித்தால் மட்டுமே பார்ப்பேன். அவர் கேரக்டர் நடிகராகவோ, வில்லனாகவோ நடித்தால் பிடிக்காது.
அதனால் வேட்டைக்காரன் படத்தினை சமீபத்தில் டிவியில் பார்த்தேன். அப்படத்தில் அவரை தான் மையமாக வைத்து எடுத்து இருந்தனர் எனக் குறிப்பிட்டார்.
ஸ்ரீஹரி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். மகள் பிறந்த நான்கு மாதத்தில் இறந்துவிட்டார். மகள் நினைவில் ஒரு நினைவு அறக்கட்டளையை அமைத்து நடத்தி வருகின்றனர். ஸ்ரீஹரி ஒரு படத்தில் இருக்கும் போது மயங்கி விழ பின்னர் அவருக்கு லிவர் பிரச்னையில் பின்னர் இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…