Categories: latest news

12 நாளாகியும் வசூலில் முக்கும் வேட்டையன்… கோட் படத்தை தொட கூட முடியலையே!..

Vettaiyan: த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அடிவாங்கி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அப்படம் கொடுத்த எனர்ஜி ரஜினிகாந்தை தொடர்ச்சியாக திரைப்படங்களை ஒப்புக்கொள்ள வைத்துள்ளது. அதன்படி அவருடைய சினிமா கேரியர் இன்னும் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி, இன்னும் சில இயக்குனர்களுடன் ரஜினிகாந்த் தரப்பு பேசிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வந்தது.

ரஜினிகாந்த் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று இருந்தாலும் படம் அவருடைய ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இதனால் அடுத்தடுத்த நாட்களில் வேட்டையன் திரைப்படத்தின் வசூல் அதள பாதாளத்திற்கு சென்றது. தமிழ்நாட்டில் 12 நாட்களை கடந்தும் இப்படத்தின் வசூல் 99.6 கோடி ரூபாயாக உள்ளது.

இந்திய மொத்தமாக 137.27 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. பொதுவாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஒரு வாரத்திற்குள்ளேயே பல நூறு கோடிகள் தாண்டும். ஆனால் வேட்டையன் இதில் தவறவிட்டிருக்கிறது. இதே வேளையில் ரஜினிகாந்திற்கு போட்டியாக நினைக்கப்படும் விஜயின் கோட் 500 கோடியை நெருங்கிவிட்டது.

ஆனால் அப்படத்தின் போட்டியாக எதிர்பார்க்கப்பட்ட வேட்டையன் கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாமல் தவறவிட்டு இருக்கிறது. இப்படமும் லால் சலாம் போல லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய தோல்வியாகவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago