கோட் பக்கத்துல கூட வரமுடியல!.. ஜெயிலர் முதல் நாள் வசூலையும் தொட முடியாமல் திணறிய வேட்டையன்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:49  )

லைக்கா தயாரிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் எதிர்பார்த்த அளவுக்கு உலக அளவில் வசூல் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளில் 120 கோடிக்கும் அதிகமான வசூலை வசூல் செய்து மாஸ் காட்டியது.

ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் விஜயின் கோட் படத்தின் வசூலை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை கூட வேட்டையன் திரைப்படம் தரவில்லை.

இந்தியா முழுவதும் சுமார் 30 கோடி ரூபாய் வசூலை வேட்டையின் திரைப்படம் ஈட்டி உள்ளது. விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் முதல் நாளில் 176 கோடி ரூபாய் வசூல் செய்தது.

வேட்டையன் திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்களை முதல் நாளிலிருந்து பதிவிட்டு வந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் கோட் படத்தின் வசூலை முந்த வில்லை என்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் வேட்டையன் டிசாஸ்டர் என்றும் உங்கள் லெவல் அவ்வளவுதான் என்றும் லால் சலாம் படத்திற்கு பிறகு ரஜினியின் மார்க்கெட் சரிந்துவிட்டது என்றும் கூறி வருகின்றனர்.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தான் ஒரு சங்கி நிரூபித்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் படம் பெரிய எதிர்பார்ப்பை பெறவில்லை என்றும் கூறுகின்றனர். யோகி ஆதித்யநாத் காலில் போய் விழுந்தது, சங்கி என்பது தவறான வார்த்தை அல்ல என தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புலம்பிய பின்னரும் பேசியது என ரஜினிகாந்தின் நடவடிக்கைகள் படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என வரிசையாக விடுமுறை நாட்கள் என்பதால் வேட்டையன் திரைப்படம் நாளுக்கு நாள் வசூலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் 160 கோடி என்பதால் நிச்சயம் லாபகரமான படமாக வேட்டையின் மாறிவிடும் என்றும் 400 கோடி பட்ஜெட்டில் கோட் படத்தை எடுத்துவிட்டு 455 கோடி வசூல் ஈட்டுவது வெற்றி படம் என கூற முடியாது என ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Next Story