விஜயை எச்சரித்த ரஜினி ரசிகர்கள்! வேட்டையனை வேட்டையாடிய விஜய் ரசிகர்கள்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:52  )

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தப் படம் உலக அளவில் இரு தினங்களில் 100 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளி சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினங்களாக இருப்பதால் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இந்த தினங்களில் பெரிய அளவு வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இரு தினங்களில் உலகெங்கிலும் 100 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் விஜய் ரசிகர்கள் அந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பாகவே வேட்டையன் திரைப்படத்தை வேட்டையன் டிசாஸ்டர் என்ற பெயரில் ஹேஸ்டேக் ஆரம்பித்தும் இன்னும் உச்சகட்டமாக அந்தப் படத்தை திருட்டு வீடியோவாக எடுத்து விஜய் ரசிகர்கள் முகநூலில் பதிவிட்டும் வருவதாக அவர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளன.

இன்னும் சில விஜய் ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்திற்காக கங்குவா திரைப்படத்தை தள்ளி வைத்த சூர்யாவை கிண்டல் செய்தும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ஜெய் பீம் படத்தில் தங்களுடைய சமூக மக்களை தவறாக காட்சிப்படுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வேட்டையன் திரைப்படத்தை புறக்கணிப்போம் என குறிப்பிட்ட சமூக மக்கள் சமூக வலைதளங்களில் வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு பிரச்சாரம் கொடுத்து வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி மாயாஜாலில் வெளியிடப்பட்ட வேட்டையன் திரைப்படம் அனைத்து அரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதாக அங்குள்ள ரஜினி ரசிகர்கள் ஆதாரப்பூர்வமாக கூறிவரும் நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைக்கும் விஜய் தன்னுடைய ரசிகர்களை கட்டுப்படுத்தாவிட்டால் அதன் பலனை தேர்தலில் அனுபவிக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி வசூல் செய்திருப்பதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story