500 பேரை இறக்கி இருக்காங்களாம்... லியோ ரேஞ்சுக்கு கலக்கும் வேட்டையன்... அப்போ ஒரு சம்பவம் இருக்கு!
ஜெயிலர் படம் ஹிட்டுக்கு பின் எப்போதும் இல்லாத வகையில் ரஜினி பிஸியாகிவிட்டார். பொதுவாக, ஒரு படம் முடிந்த பின் பல மாதங்கள் கழித்தே அடுத்த படத்தை முடிவு செய்யும் ரஜினி ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆனதால் லால் சலாம், வேட்டையன், கூலி தொடர்ந்து படங்களை புக் செய்தார்.
இதில் லால் சலாம் படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க துவங்கினார். அடிப்படையில் ஞானவேல் ஒரு பத்திரிக்கையாளர்.
அதோடு, ஜெய்பீம் படத்திற்கு அவர் எழுதியிருந்த திரைக்கதை பலராலும் பாராட்டை பெற்றது. ஆனால், ரஜினியோ ஒரு கமர்ஷியல் ஹீரோ. அவர் படத்தில் பன்ச் வசனங்கள், அடியாட்களை துவம்சம் செய்வது, மாஸ் காட்டுவது போன்ற காட்சிகள் நிறைய இருக்கும். ரஜினி ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள்.
எனவே, ரஜினியை வைத்து ஞானவேல் எப்படிப்பட்ட படத்தை கொடுப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம், நாகர் கோவில், கன்னியாகுமாரி, ஹைதராபாத் என பல இடங்களிலும் நடந்தது. ரஜினி நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டாலும் மற்ற காட்சிகள் இன்னும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தானும் ஒரு கமர்ஷியல் பட இயக்குனர் என காட்ட ஆசைப்பட்ட ஞானவேல் 500 நடன கலைஞர்கள் நடனமாடுவது போல ஒரு பாடலை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். லியோ படத்தில் 2 ஆயிரம் பேர் ஆடியும் அது ஒன்றும் அந்த பாடலுக்கு பெரிதாக உதவவில்லை. அதோடு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என பிரச்சனைதான் வெடித்தது. ஆனாலும், ஞானவேலுக்கு அந்த ஆசை வந்திருக்கிறது.