Vettaiyan: ஜெய்பீம் பட இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்தில் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வந்த ரஜினி வேட்டையன் படத்தில் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
அதோடு, கல்வி தந்தை என்கிற பெயரில் கொள்ளையடிக்கும் மாபியா கும்பல் பற்றியும் இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். ஜெய்பீம் பட இயக்குனர் என்பதால் சமூக பிரச்சனைகளை பேசிய ஞானவேல் எப்படி ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்துவார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
ஒருபக்கம், இந்த படத்திற்கு இதுவரை பெரிதாக புரமோஷன் செய்யப்படவில்லை. செய்தியாளர் சந்திப்பு நடக்கவே இல்லை. படம் தெலுங்கில் வெளியானால் ஹைதராபாத்தில் பிரஸ்மீட் நடக்கும். கேரளாவுக்கு திருவனந்தபுரத்தில் பிரஸ்மீட் நடக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
சமூகவலைத்தளங்களில் மட்டுமே புரமோஷன் செய்தால் போதும் என லைக்கா நினைத்துவிட்டதா என தெரியவில்லை. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது அப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அதேபோல், வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினி பேசினார்.
அதேநேரம், லியோ படம் வெளியானபோது லோகேஷ் கனகராஜ் பல யுடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து படத்தை புரமோட் செய்தார். விக்ரம் பட வெளியானபோதும் கமலும் ஊர் ஊராக போனார். ஆனால், ஞானவேல் அப்படி எதையும் செய்யவில்லை. ஆனாலும், இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஜெயிலர் படத்தை விட முன்பதிவு அதிகமாக இருக்கிறது. அதுவும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ஜெயிலர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட அதிக வரவேற்பு கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், வெளிநாடுகளில் விஜய் படங்களுக்கே அதிக வரவேற்பு இருக்கும். ஆனால், வேட்டையன் படம் மூலம் ரஜினி விஜயையை தாண்டி இருக்கிறார்.
மொத்தத்தில் புரமோஷன் செய்யாவிட்டாலும் வேட்டையன் படம் லைக்கா நிறுவனத்துக்கு நல்ல வசூலை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…