அமிதாப் இருந்தும் மண்ணை கவ்விய வேட்டையன்!.. முதல் நாள் இவ்வளவுதான் வசூலா?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:39  )

ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா.ச.ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், ரித்திகா சிங், துஷரா விஜயன், பஹத் பாசில், ராணா என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் என்கவுண்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினி. அதே எண்கவுண்ட்டரில் ஒரு தவறு நேர்ந்துவிட ரஜினி அதை எப்படி கண்டுபிடிக்கிறார்?.. அவருக்குள் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை காட்டி இருக்கிறார்கள். ஒருபக்கம், கல்வி மாஃபியா, நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அடிக்கும் கொள்ளைகள் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

அதோடு, ரவுடியிசம், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா, கார்ப்பரேட் வில்லன் என வழக்கமான கமர்ஷியல் ஐட்டங்கள் எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக போனாலும், இரண்டாம் பாதியின் திரைக்கதை ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் ரேஞ்சுக்கு மாஸ் காட்சிகளை எதிர்பார்த்து போன ரசிகர்கள் அது இல்லாததால் ஏமாந்து போய் வருகின்றனர். ரஜினிக்கு ஏற்றது போல சில காட்சிகளை இயக்குனர் வைத்திருந்தாலும் படம் ரஜினிக்கு ஏற்ற மாஸ் படம் இல்லை என பலரும் சொல்கிறார்கள். எனவே, அதுபோன்ற காட்சிகளை எதிர்பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

ஒருபக்கம், வசூல் நிலவரத்தை பார்த்தால் தமிழகத்தில் முதல் நாளில் வேட்டையன் படம் 17 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் ஆன்லைன் முன்பதிவில் இப்படத்தின் டிக்கெட்டுகள் அதிகம் விற்பனை ஆனதாக சொல்லப்பட்டது.

ஒருபக்கம், ஹிந்தி பேசும் மக்களிடம் வேட்டையன் படம் மண்ணை கவ்வி இருக்கிறது. இந்த படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடித்தும் வட இந்தியாவில் இப்படம் வெறும் 60 லட்சத்தை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதாவது, ஹிந்தி பெல்ட்டில் வேட்டையன் படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

Next Story