ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் 'வேட்டையன்'... வெளிநாடுகளில் அனல் பறக்கும் வசூல்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 11:10:54  )

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 73 வயதான போதிலும் தற்போது வரை இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவர் கடைசியாக நெல்சன் இயக்கத்தின் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. அடுத்ததாக தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து அமிதாப்பச்சன், ராணா , ரித்திகா சிங், அபிராமி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் மீது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இந்த திரைப்படம் பற்றிய அப்டேட் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க ஞானவேலின் ஸ்டைலில் இல்லாமல், ரஜினிக்காக கமர்சியல் பேக்கேஜாக உருவாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்று முடிந்தது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் உலகம் எங்கிலும் வெளியாக உள்ளது. நாளை இந்தியாவில் ப்ரீ புக்கிங் தொடங்க உள்ள நிலையில் வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன்படி வெளிநாடுகளில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் 1.5 மில்லியன் டாலர் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதை வைத்து பார்க்கும் போது இந்தியாவிலும் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வேட்டையன் திரைப்படமும் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப்பட்டு இருந்தார். அவரின் ஆசை கட்டாயம் அவரது ரசிகர்களால் நிறைவேற்றப்படும் என்று கூறி வருகிறார்கள்.

Next Story