வேட்டையன் படத்தின் வெற்றியைத் தடுத்தது விஜய் ரசிகர்களா? என்ன சொல்கிறார் பிரபலம்?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:47  )

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சுவாரியர், ரித்திகாசிங் உள்பட பலர் நடித்த படம் வேட்டையன். இந்தப் படம் வருவதற்கு முன்பு ஜெய்பீம் இயக்குனர் என்பதாலும் ரஜினிக்கேற்ற கமர்ஷியல் கலந்து இருப்பதாகச் சொன்னதாலும் படத்தின் மீது மிகப்பெரிய ஹைப் இருந்தது.

அதுமட்டுமல்லாமல் அனிருத்தின் இசையில் படத்தில் மனசிலாயோ பாடல் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. படம் நிச்சயம் 1000 கோடி வசூலை ஈட்டும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 30 கோடி வசூலித்ததாக சொல்லப்பட்டது. உலகெங்கும் மொத்தமாக 240 கோடிக்கும் மேல் வசூலித்ததாகவும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

வேட்டையன் படத்தை விஜய் ரசிகர்கள் கேவலமாக விமர்சிக்கிறாங்க. ஏன் அப்படி பேசுறாங்க. அந்தளவுக்கு ஒண்ணும் வேட்டையன் படம் அப்படி விமர்சிக்கிற அளவுக்கு அவ்வளவு கேவலமாக எல்லாம் இல்லை. ஓரளவுக்கு நல்ல படமாகத் தான் இருக்கு.

அப்படி இருக்கும் போது ஏன் இதை விமர்சிக்கிறாங்க. விஜய் ஏன் இதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தட்டிக் கேட்காமலும் இருக்காருன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

வேட்டையன் படம் மிகப்பெரிய வெற்றியை அடையாமல் இருப்பதற்கு விஜய் ரசிகர்களைக் காரணமாகச் சொல்லி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேட்டையன் படத்தோட திரைக்கதையை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்கல. கொண்டாடவில்லை.

அதனால் தான் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லையே தவிர, அதற்கு விஜய் ரசிகர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகவே விஜயும் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கி வருவதாலும், அடுத்த சூப்பர்ஸ்டார் பிரச்சனை வெடித்ததாலும், ரஜினியின் காக்கா, கழுகு கதையாலும் இரு தரப்பு ரசிகர்களும் அவ்வப்போது இணையதளங்களிலும் மோதிக்கொள்கின்றனர்.

அவர்களே சமரசமாகப் போனாலும் இவர்கள் விட்டபாடில்லை. அதனால் தான் இதுபோன்ற கேள்விகளும் ரசிகர்களால் எழுப்பப்பட்டுள்ளது என்றே தெரிகிறது.

Next Story