4 நாட்கள் ஆகியும் கோட் வசூலை தாண்டாத வேட்டையன்!.. நான்தான் கிங்குன்னு நிரூபித்த விஜய்!...
Vettaiyan: சினிமாவில் போட்டி என்பது எப்போதும் இருக்கும். 80களில் இருந்தே ரஜினிக்கு சக போட்டியாளராக இருந்தவர் கமல்ஹாசன் மட்டுமே. இருவரின் படங்களும் ஒரேநாளில் வெளியாகும். அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு கொள்வார்கள். ஒரு கட்டத்தில் வசூலில் கமல் தொட முடியாத அளவுக்கு மேலே போனார் ரஜினி.
சம்பளத்திலும் கமலை விட சில மடங்கு அதிகமாக வாங்கினார். ஒருகட்டத்தில் இனிமேல் ரஜினிக்கு கமல் போட்டியே இல்லை என்கிற நிலை உருவானது. மற்றொன்று, கமல் வித்தியாசமான கதைகளிலும், தோற்றங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். கடந்த 10 வருடங்களில் ரஜினியின் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
எந்திரன், 2.0, பேட்ட படங்கள் நல்ல வசூலை பெற்றது. முக்கியமாக ஜெயிலர் படம் அசத்தலான வெற்றியை பெற்றது. ஒருபக்கம், சம்பளத்திலும், வசூலிலும் ரஜினியை ஓவர்டேக் செய்து கொண்டிருந்தார் நடிகர் விஜய். ரஜினி 100 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் விஜய் 200 கோடியை தொட்டார்.
எனவே ரஜினிக்கு விஜயே போட்டி நடிகராக மாறினார். இப்போது, சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சண்டை போட்டு வருகிறார்கள். அதிலும், ரஜினியை மோசமாக விமர்சித்து வருவதோடு, டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக் போட்டும் சந்தோசப்பட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜயின் கோட் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதன்பின் ரஜினியின் வேட்டையன் படம் வெளியானது. இந்த படம் போலீசார் செய்யும் என்கவுண்டரின் மறுபக்கம் பற்றி பேசுகிறது. நல்ல கருத்துள்ள படம் என்றாலும் ரஜினி ரசிகர்கள் வேறு மாதிரி படத்தை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ஜெயிலரை போல பெரிய வெற்றிப்படமாக வேட்டையன் அமையவில்லை.
கோட் படம் 4 நாட்களில் 288 கோடியை வசூல் செய்திருந்தது. ஆனால், வேட்டையன் ரிலீஸாகி 4 நாட்களில் 240 கோடியை வசூல் செய்திருக்கிறது. படத்தின் மீது வந்த விமர்சனங்கள், தனி தியேட்டர்களில் அதிக டிக்கெட் விலை, தொடர் மழை ஆகிய காரணங்களால் இனிமேல் வேட்டையன் படத்திற்கு வசூல் இருக்காது என் சொல்லப்படுகிறது.
எப்படி பார்த்தாலும் கோட் பட வசூலை வேட்டையன் தாண்டாது என்றே சொல்லலாம்!...