‘வேட்டையன்’ பத்தி சொல்றத யாரும் நம்பாதீங்க! ரஜினி கெரியரில் இப்படி ஒரு படமா?
ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி , ரோகிணி போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் வேட்டையன் திரைப்படத்திற்கு எந்தவித ஹைப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்த நிலையில் வேட்டையன் படம் இன்று ரிலீஸாகியிருக்கும் நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் அவரவர் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு பெண் ரசிகை ஒருவர் வேட்டையன் படத்தை பார்த்த பிறகு மிகவும் ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார். அதாவது வேட்டையன் படத்தை ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி எடுத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு கதையை இப்ப எடுத்திருக்காங்க. ரொம்ப மோசமாக இருக்கிறது.
மொக்கையா இருக்கு. ஒரு சீன் கூட நல்லா இல்ல. எதுவுமே நல்லா இல்ல. இரண்டாம் பாதி முதல் பாதி என எதுவும் நல்லா இல்ல. ஜீரோ மார்க்தான். ரஜினி வரும் சீன் கூட புடிக்கல. வேட்டையன் படம் நல்லா இருக்குனு யாராவது சொன்னா யாருமே நம்பாதீங்க என மொத்தமா படத்தை டேமேஜ் செய்திருக்கிறார் அந்த ரசிகை. ஆனால் ட்விட்டரில் ரசிகர்கள் மாஸ்.. கொல மாஸ் என தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஜெய்பீம் இயக்குனர் என்ற பார்வையில் கண்டிப்பாக வேட்டையன் படம் ஒரு கண்டண்ட் உள்ள படமாகத்தான் இருக்கும். அதில் ரஜினி இருக்கிறார் என்றால் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கும். ஏற்கனவே வேட்ட்டையன் டிரெய்லரில் ரஜினி கூறும் போது ‘கருத்து சொல்லும் படம் எனக்கு செட்டாகாது. நான் படத்துல நடிக்கிறேன் என்றால் அந்தப் படம் வசூல் அடிக்கனும். ரசிகர்கள் கொண்டாடனும். அவ்ளோதான்’ என கூறியிருந்தார்.
அதனால் படத்தை ரசிகர்கள் கொண்டாடவேண்டும் என வந்திருப்பார்கள். ஆனால் படத்தின் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதனாலயே ஒரு சில ரசிகர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.