யாரும் எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்! ‘வேட்டையன்’ படத்தில் கவனிக்கப்பட வேண்டிய கேரக்டர்ஸ்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். ரஜினி நடிப்பில் தச ஞானவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸான நிலையில் ரஜினி ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் காண ஆர்வமாக செல்வதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் சிறப்புக்காட்சியாக 9 மணிக்கு படம் ரிலீஸானது.
ஆனால் அதற்கு முன்பே கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்டு ட்விட்டர் மூலம் படத்தை பற்றி ரசிகர்கள் கருத்துக்களை கூறிவந்தனர். இந்த நிலையில் வேட்டையன் படத்தை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சேகுவாரா அவருடைய கருத்தை கூறியிருக்கிறார்.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களை பொறுத்தவரைக்கும் படத்தில் மாஸ் இருக்கும். ஆனால் கதை இருக்காது. ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் நல்ல கதையும் இருக்கிறது. ரஜினியும் இருக்கிறார். அதனால் படம் வேற லெவலில் இருக்கிறது என கூறியிருக்கிறார். போலி என்கவுண்டர்கள் மற்றும் கோச்சிங் க்ளாஸில் நடக்கும் ஊழல் இவற்றை பற்றி விளக்கும் படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
போலி என்கவுண்டர்களை பற்றி துப்பறியும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். இந்த கதை வெளியான காலகட்டம் என்கவுண்டர் சூழலாகத்தான் இருக்கிறது.படத்தில் கதை, திரைக்கதை , வசனம் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. வசனம் தான் படத்திற்கு ஹைலைட்டே.
மேலும் ரஜினிக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே நடக்கும் விவாதம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. படத்தில் ரஜினியையும் தாண்டி கவனிக்கப்பட வேண்டிய கதாபாத்திரங்கள் என்று சொன்னால் அமிதாப் பச்சன் மற்றும் பகத் பாசில்.
தமிழில் மூன்றாவது திரைப்படமாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பகத் பாசில். மற்ற இரு படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷனை அவரது நடிப்பில் காட்டியிருக்கிறார் பகத். ரஜினி மற்றும் பகத் இடையே நடக்கும் தமாஷான விஷயங்கள் அதிகளவில் கவனத்தை பெறுகின்றன.
குறிப்பாக இதுவரை பார்க்காத க்ளைமாக்ஸ் இந்தப் படத்தில் இருக்கும். இதற்கு முன் சிட்டிசன் மற்றும் ஜெண்டில்மேன் போன்ற படங்களில் எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் இருக்கும். அதை விட வித்தியாசமான ஒரு க்ளைமாக்ஸாக வேட்டையன் திரைப்படத்தில் இருக்கிறது என சேகுவாரா கூறியிருக்கிறார்.