இன்னும் அடிச்சு துரத்தும் ‘லப்பர் பந்து’! வேட்டையன் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?
ரஜினியின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வேட்டையன். படம் இதுவரை நேர்மறையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. ரஜினி வைத்து ஒரு நல்ல கருத்துள்ள படத்தை கொடுத்திருக்கிறார் ஞானவேல் என அனைவரும் கூறி வருகிறார்கள்.
ஒரு மசாலா படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இல்லை என்று தான் சொல்கிறார்கள். ரஜினியின் மற்ற படங்களை பார்க்கும் பொழுது வேட்டையன் திரைப்படம் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் படம் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு திரைப்படம் என்று சொல்லப்படுகிறது .ஆனால் வசூலில் பார்க்கும் பொழுது நேற்று தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி அளவிற்கு தான் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் உலக அளவில் 60 கோடி வசூல் என்ற கூறுகிறார்கள்.
இது ரஜினி படத்துக்கு தானா என்று அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுவே ரஜினியின் ஒரு கமர்சியலான படமாக இருந்தால் இன்னும் வசூல் அதிகளவில் போயிருக்கும் .நூறு கோடியையும் தாண்டியிருக்கும் .ஆனால் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் வெறும் 17 கோடி என்று சொல்கிறார்கள்.
அதற்கு காரணம் தமிழ்நாட்டில் வேட்டையன் திரைப்படத்திற்கு 600 ஸ்கிரீன் தான் கொடுக்கப்பட்டிருந்ததாம். ஏனெனில் இன்னும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் லப்பர் பந்து திரைப்படம் தான் ஒட்டிக்கொண்டிருக்கிறதாம். இன்னொரு பக்கம் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படமும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் வேட்டையன் திரைப்படத்திற்கு 600 ஸ்கிரீன் தான் ஒதுக்கப்பட்டு இருந்ததாம் .
இதுவே வேட்டையன் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் குறைவிற்கு காரணம் என சொல்கிறார்கள். மேலும் வேட்டையன் திரைப்படத்திற்கு சரியான பப்ளிசிட்டி இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஹைதராபாத்தில் ஞானவேல் பட சம்பந்தமான வேலையில் இருந்ததாகவும் அதை முடித்துவிட்டு சேனல்களுக்கு பேட்டி கொடுக்கணும் என்ற ஒரு கடமையில் இரண்டு மூன்று சேனல்களுக்கு பேட்டி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. சரியான ஒரு பிரமோஷன் இல்லை என்றும் கூறப்படுகிறது.