ரஜினியும், அமிதாப்பும் வர்ற சீன் தெறிக்க விடுமாம்... பயில்வானின் வேட்டையன் ரிவியூ

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:13  )

தமிழகத்தில் மட்டும் 900 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கிறது வேட்டையன். படம் எப்படி இருக்குன்னு பிரபல நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் இன்று வெளியாகி இருக்கிறது. அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ரஜினி வருகிறார். ஆன்லைன் கல்வியில் எவ்வளவு ஊழல் நடக்கிறது என்பது தான் கதை. ராணா டகுபதி கல்வித் தந்தையாக வருகிறார். அவர் பள்ளிக்கல்வி ஆசிரியரைக் கொலை செய்து விடுகிறார்.

இதன் காரணமாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அவரைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் இதை மூத்த அதிகாரி அமிதாப்பச்சன் மறுக்கிறார். அவருக்கும், ரஜினிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் வெறித்தனமாக இருக்கிறது. பொதுவாக த.செ.ஞானவேல் வசனத்தில் வல்லவர்.

போலீஸையும் விட்டுவைக்க வில்லை. என்கவுண்டர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. போலீஸ் சுட்டா என்கவுண்டர். நாம் சுட்டா கொலை. எதிரி தப்பித்தான். அதற்காக சுட்டான். அதுவும் தற்காப்பிற்காக என்று ஒரே வரியில் முடித்துவிடுவார்கள்.

என்கவுண்டர் ஏன் நடக்க வேண்டும் என்ற விவாதம் இந்தப் படத்தில் நடக்கிறது. படத்தில் துஷாரா விஜயன் பள்ளிக் கூட ஆசிரியராக நடித்துள்ளார். அவரைச் சுற்றித் தான் கதை. ரஜினியின் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார்.

ஜெயிலருலயும் துப்பாக்கி, வேட்டையனிலும் துப்பாக்கி வைத்துள்ளார் ரஜினி. காவலர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இயக்குனர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். துஷாரா விஜயனை அடுத்த விஜயசாந்தி என ரஜினி பாராட்டியுள்ளார்.

துஷாரா விஜயன் வரும்போது ரஜினி எழுந்து மரியாதை கொடுத்தாராம். அது தான் ரஜினி பண்பாடு. யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பவர் ரஜினி. சின்ன நடிகை என்ற பாகுபாடு எல்லாம் அவரிடம் கிடையாது. ரித்திகாசிங் காவல்துறை அதிகாரியாக வேற லெவல்ல மாஸ் காட்டியிருக்கிறார்.

குத்தாட்டத்து சாங்லயும், சோலோ சாங்லயும் அனிருத் அசத்தியுள்ளார். படத்தின் நீளம் 2 மணி 47 நிமிஷம். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை படம் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் செல்கிறது. வேட்டையன், வேட்டைக்காரன் இரண்டும் ஒன்று தான். வேட்டையன்னா பளிச்சின்னு தெரியும். ஜெயிலர் வசூலை ரஜினி படம் வேட்டையன் முறியடிக்கும்.

1000 கோடியைக் கிராஸ் ஆகும்னு ரஜினி திட்டவட்டமாக சொல்றார். 5000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளதாம். ப்ரீ புக்கிங்லயே 28 கோடியைத் தட்டியுள்ளது வேட்டையன்.

Next Story