விடாமுயற்சியால் குட் பேட் அக்லிக்கு வந்த ஆப்பு!.. இப்படி பண்ணிட்டாரே ஏகே!..

by சிவா |
விடாமுயற்சியால் குட் பேட் அக்லிக்கு வந்த ஆப்பு!.. இப்படி பண்ணிட்டாரே ஏகே!..
X

Vidaamuyarchi: அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. அஜித் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆன நிலையில் இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால், இந்த படம் அஜித் ரசிகர்களையே திருப்திபடுத்தவில்லை என்றே சொல்லப்படுகிறது.

ரசிகர்களின் விமர்சனம்: அதற்கு காரணம் அஜித் ரசிகர்கள் அஜித்திடம் எதிர்ப்பார்க்கும் எந்த கமர்ஷியல் விஷயங்களும் விடாமுயற்சி படத்தில் இல்லை. மாஸ் எண்ட்ரியோ, பன்ச் வசனமோ, கூஸ்பம்ஸ் காட்சிகளோ எதுவுமே இல்லை. இது எதுவும் படத்தில் இருக்காது என மகிழ் திருமேனி சொன்னாலும் ரசிகர்களுக்கு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஆரவிடம் அஜித் அடி வாங்குவது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. படத்தில் நிறைய வசனங்களே இடம் பெற்றிருப்பதால் அது அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதனால் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் நெகட்டிவாக சொல்ல படத்தின் வசூலும் படுத்துவிட்டது.

விடாமுயற்சி வசூல்: முதல்நாளே இப்படம் 40 கோடி வசூல் என அஜித் ரசிகர்கள் அடித்துவிட்டாலும் உண்மை நிலவரம் அது இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். நேற்று வெளியான இப்படம் தமிழகத்தில் 23.80 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது எனவும், 2ம் நாளான இன்று 6 கோடி வசூலித்தாலே அதிகம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் 35 கோடி ஷேர் கொடுத்தாலே அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.

குட் பேட் அக்லி வியாபாரம்: ஒருபக்கம், விடாமுயற்சி படும் படுதோல்வி அடைந்திருப்பதால் அடுத்து வரவுள்ள குட் பேட் அக்லி படத்தின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் ராகுல் குட் பேட் அக்லியின் தமிழ்நாட்டு உரிமையை 75 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால், விடாமுயற்சி நஷ்டத்தால் டேபிள் லாஸ் 75 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

விடாமுயற்சி படம் லைக்காவுக்கு 200 கோடி வரை நஷ்டத்தை கொடுக்கும் என சொல்லப்படுவதால் அந்நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்கும் வியாபாரரீதியாக சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story