மொத்தமா காலி பண்ணிட்டாரே அஜித்… லைக்காவுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா?..
Vidaamuyarchi: அஜித் குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
லைக்கா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இரண்டு வருடங்களுக்கு முன்னரே இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. படத்தின் ஆரம்ப முதலிலேயே இப்படம் நிறைய சிக்கல்களை சந்தித்தது.
முதலில் இப்படத்தின் இயக்குனர் மாற்றம் பின்னர் அஜித்தின் பைக் ரேஸ் என தொடர் பிரச்சினைகள் நடந்து வந்தது. பின்னர் ஒரு வழியாக படத்தை அஜர்பைஜானில் படக்குழு தொடங்கியது. அங்கும் கால சூழ்நிலையால் நிறைய முறை படப்பிடிப்பு தள்ளி போய் லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார சுமை அதிகரிக்க தொடங்கியது.
அதே நேரத்தில் லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்துடன் இணைந்து வேட்டையன் திரைப்படத்தையும் தயாரித்து வந்தது. அப்படத்தின் ரிலீஸ் காரணம் காட்டி விடாமுயற்சி திரைப்படத்தை சில காலம் நிறுத்தி வைத்திருந்தது. அப்படமும் வெளியாகி லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில் தமிழ்நாடு வசூல் மட்டும் 25 கோடியை கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் மட்டுமே ஏற்படும் என தற்போது பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது விடாமுயற்சி திரைப்படத்தால் லைக்கா நிறுவனம் 200 கோடி வரை நஷ்டமடையும் என தற்போது பேச்சுக்கள் இழந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை லைக்கா நிறுவனத்திடம் இருந்து விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ ரிப்போர்ட் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.