என்ன விடாமுயற்சி திரைப்படம் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகமா? ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்…
Vidaamuyarchi: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில், இப்படம் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் என்கின்றனர் ரசிகர்கள்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்திருக்கிறார்.
பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸாக பல நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் திரையரங்குகளில் கூட தொடங்கி இருக்கின்றனர்.
இப்படம் வெளியாகி அடுத்த நான்கு நாட்களுக்கு எல்லா காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாகி இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் தன்னுடைய இசையால் ஆதிக்கம் செலுத்தாமல் காட்சிகளோடு ஒன்றும் படி இசையை அமைத்திருக்கிறார்.
படம் நேற்று வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களை குவித்து வருகிறது. படம் வெளியாகி ஒரு சில காட்சிகள் முடிந்த சில மணி நேரங்களில் படத்தில் நடிகை திரிஷா தன்னுடைய கணவரான அஜித்தை கொலை செய்ய அர்ஜுன் மற்றும் ரெஜினாவை நாடியா சீக்ரெட் தகவல் கசிந்துவிட்டது.
இந்நிலையில் மேலும் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் என வர்ணித்து வருகின்றனர். காரணம் முதல் பாகத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக நடிகை திரிஷாவை விநாயக் மகாதேவான அஜித் காதலித்து ஏமாற்றி விடுவார்.
தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து கணவன் மற்றும் மனைவியாக அஜித் மற்றும் திரிஷா இதில் நடித்திருக்கின்றனர். மங்காத்தாவில் அர்ஜுனுடன் சேர்ந்து அஜித் நடித்தது போல இந்த பாகத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து திரிஷா அஜித்தை ஏமாற்றுகிறார். இதற்காகவே ரசிகர்கள் இதை ஒரே கதை என கலாய்த்து வருகின்றனர்.