விடாமுயற்சியில் எல்லாமே அஜித்தான்!.. மகிழ்திருமேனி செஞ்சது இதமட்டும்தான்!. ஷாக்கிங் நியூஸ்!...

Vidaamuyarchi: பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என எல்லா இயக்குனர்களும் ஆசைப்படுவார்கள். ஏனெனில், பெரிய நடிகர்களின் படங்கள் எல்லோராலும் கவனிக்கப்படும். அந்த நடிகரின் ரசிகர்களின் பார்வையும் அந்த இயக்குனர் மீது படும். ஊடகங்கள் எல்லாம் அந்த படத்தை பற்றியும் அந்த இயக்குனர் பற்றியும் செய்தி வெளியிடுவார்கள். அந்த படத்தாலேயே இயக்குனர் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடுவார்.
ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இது நடக்கும். நெல்சன், ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், அட்லி போன்றவர்கள் பிரபலமானதே இப்படித்தான். அப்படி அவர்கள் எடுக்கும் படம் ஹிட் அடித்து வசூலை அள்ளிவிட்டால் இயக்குனர்களுக்கு அதிக சம்பளமும் கிடைக்கும்.
ஜெயிலர் பட ஹிட்டுக்கு பின் நெல்சன் 50 கோடி சம்பளம் கேட்கிறார். அமரன் திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி பிரபலமாக்கியிருக்கிறது. பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த ஹீரோ சொல்வதை இயக்குனர் கேட்க வேண்டியிருக்கும். அவர்களுக்கும் வேறுவழியில்லை. முடியாது என சொன்னால் இயக்குனரை மாற்றிவிடுவார் அந்த ஹீரோ.
அஜித் இயக்குனர் சொல்லும் கதையை மாற்றிவிடுவார் என சொல்வார்கள். சிறுத்தை சிவா இயக்கிய விவேகம் படமே அஜித் சொன்ன கதை எனவும் ஒரு செய்தி உண்டு. அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு ஹெச்.வினோத்துக்கு கிடைத்தபோது அவரின் சொந்த கதையில் அடிக்காமல் ஹிந்தியில் வெளியான ‘Pink’ படத்தின் கதையில் நடித்தார் அஜித். ஹெச்.வினோத் படத்தை மட்டுமே இயக்கினார்.
இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இதுதான் கதை என தேர்ந்தெடுக்கவே 6 மாதங்கள் ஆனது. மகிழ் திருமேனி சொன்ன கதையை வேண்டாம் என சொல்லிவிட்டு ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் கதையை எடுப்போம் என சொன்னதே அஜித்தான்.
மேலும், நிஜக்கதையில் சில மாற்றங்களை செய்து இந்த படத்திற்கு இதுதான் திரைக்கதை, படத்தை இப்படி எடுப்போம்.. இங்கு எடுப்போம் என எல்லாம் சொன்னது அஜித் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதாவது, அஜித் சொன்னதை இயக்கியது மட்டுமே மகிழ் திருமேனியின் வேலை. அதை அவர் சரியாக செய்துகொடுத்துவிட்டார் என்கிறார்கள்.
'அடுத்த படம் உங்களின் சொந்த கதை' என மகிழ் திருமேனிக்கு வாக்கு கொடுத்திருக்கிறார் அஜித். என்ன நடக்கப்போகிறது என பார்ப்போம்.