சவதீகா பாடலின் நியூ வெர்ஷன்!.. இதுதான் நீங்க சொன்ன அப்டேட்டா?.. இப்படி ஏமாத்திட்டீங்களே..

Vidaamuyarchi: சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே விடாமுயற்சி பேச்சு தான் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றது. நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை எடுத்து வந்தார்கள்.
பிரேக் டவுன் தழுவல்: ஆங்கிலத்தில் வெளிவந்த பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் தான் விடாமுயற்சி. ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இப்படம் அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஏற்பட கால சூழ்நிலை காரணமாக படத்தை எடுத்து முடிப்பதற்கு காலதாமதம் ஆனதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார். மேலும் ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
விடாமுயற்சி ரிலீஸ்: கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தில் இருந்து வெளிவந்த பாடல், டீசர், டிரைலர் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது.
புரமோஷன் நிகழ்ச்சி: விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலரும் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் ஆரவ், ரெஜினா போன்றவர்கள் தொடர்ந்து youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதிலும் மகிழ் திருமேனி படம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் பேசி வருவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
படத்தின் அப்டேட்: விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் தொடர்ந்து படத்தில் இருந்து நடிகர் அஜித்தின் புதுப்புது புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் 11.08 மணிக்கு புது அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். இதை பார்த்த பலரும் நிச்சயம் படத்தின் அடுத்த சிங்கில் அல்லது வேறு ஏதாவது வீடியோ வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
சவதீகா நியூ வெர்சன்: இந்நிலையில் விடாமுயற்சி அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே வெளியான சவதீகா பாடலின் நியூ வெர்ஷன் எனக் கூறி அனிருத் மற்றும் ஆண்டனி தாசன் பாடிய வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் பலரும் இதுதான் நீங்கள் சொன்ன அப்டேட்டா? என்று திட்டி தீர்த்து வருகிறார்கள்.