கலாய்க்கவா செய்றீங்க.. இதோ வச்சுக்கோங்க! செகண்ட் லுக் போஸ்டரில் தெறிக்க விடும் தல

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். அவர் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக கலந்து கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா அர்ஜுன் ஆரவ் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

60% படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் அதற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ஒரு வருட காத்திருப்புக்குப் பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படியா வெளியிடுவது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியிருக்கிறது.

இதை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அஜித்தை பொருத்தவரைக்கும் கோலிவுட்டில் பெரிய ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்திருப்பவர் அஜித். அதனால் அவருடைய ஒவ்வொரு படங்களின் மீதும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

அதுவும் இந்த விடாமுயற்சி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். மகிழ்திருமேனி ஏற்கனவே பல நல்ல படங்களை கொடுத்தவர். ஆக்சன் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர்.

அதனால் அஜித்தை வைத்து ஒரு தரமான படத்தை தான் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

Next Story