Categories: latest news

நானும் வாழ மாட்டேன் வாழவும் விடமாட்டேன்.. விடாமுயற்சிக்கு விடிவே இல்லையா!..

அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு வருடங்களாக காத்திருப்பது அவரின் திரைப்படத்திற்காக தான். கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஹச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகர் அஜித். இந்த திரைப்படம் 2022 ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்த திரைப்படம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தாய்லாந்தில் முடிவடைந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகை திரிஷா நடித்திருக்கின்றார். மேலும் நடிகர்கள் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் அப்டேட் மற்றும் எப்போது படம் வெளியாகும் என்கின்ற தகவலை கேட்டு கேட்டேன் ரசிகர்கள் நொந்து போய்விட்டார்கள். அது மட்டுமில்லாமல் நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு முன்னதாகவே முடிந்து விட்டது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ளது. இன்று நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் தனி விமானத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இது ஒரு புறம் இருக்க விடாமுயற்சி திரைப்படம் நிச்சயம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிவிடும் என்பதில் ரசிகர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

ஆனால் விடாமுயற்சி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமா என்று தற்போது சந்தேகம் எழுந்திருக்கின்றது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளில் கூட படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிடவில்லை. பெரிய நிறுவனங்கள் தங்களது படங்களின் வெளியீட்டு தேதியை கூட சரியாக சொல்வது கிடையாது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகின்றது என்பதால் தான் வீரதீரசூரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகவில்லை என்றால் நிச்சியம் அவர்களாவது பொங்கல் பண்டிகைக்கு தங்களது படத்தை வெளியிடுவதற்கு முன்வருவார்கள். ஆனால் லைக்கா நிறுவனம் தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் இருந்து வருகின்றது.

விடாமுயற்சி திரைப்படத்தின் சென்சார் தற்போது வரை முடிவடையாமல் இருந்து வருகின்றது. ஓவர்சிஸிலும் படத்தின் சென்சார் முடிவடையவில்லை. இதனால் கோலிவுட் வட்டாரங்களில் நிச்சயம் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று கூறி வருகிறார்கள். அதை லைக்கா நிறுவனம் உறுதி செய்துவிட்டால் மற்ற படங்களாவது தங்களது படங்களை பொங்கலுக்கு வெளியிடுவதற்கு முன் வருவார்கள் என்று லைக்கா நிறுவனத்தின் மீது கோபத்தை கொட்டி வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

5 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

2 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

5 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

18 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

19 hours ago